ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து

விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய யாருக்கு வாய்ப்பளித்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்தான தனது கருத்தை சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியாவும் இங்கிலாந்தும் பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பிவருகிறது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளது. அதேநேரத்தில் இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு வீரர்கள் காயம்தான் சிறிய பின்னடைவாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கை கட்டைவிரலில் அடிபட்ட தவான், காயம் குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என்பதால் உலக கோப்பையிலிருந்தே விலகினார். அவரை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் காயமடைந்தார். அதனால் அந்த போட்டியில் பாதியில் களத்திலிருந்து வெளியேறிய புவனேஷ்வர் குமார் பின்னர் பந்துவீசவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆடவில்லை.

அதனால் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக களமிறங்கிய ஷமி, அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், புவனேஷ்வர் குமார் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் முழு உடற்தகுதியை பெற்றுவிட்டாரா என தெரியவில்லை.

இந்நிலையில், புவனேஷ்வர் குமார் முழு உடற்தகுதியை பெற்றுவிட்ட நிலையில், புவனேஷ் – ஷமி இருவரில் யாரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் எடுக்கலாம் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சச்சின், ஷமியிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் இருவரில் என்னுடைய சாய்ஸ் புவனேஷ்வர் குமார் தான். ஏனெனில் அவர்தான் நமது முதன்மையான ஃபாஸ்ட் பவுலர். எனவே அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவரே ஆட வேண்டும். கிறிஸ் கெய்லுக்கு புவனேஷ்வர் குமாரால் தான் நல்ல டஃப் கொடுக்க முடியும் என சச்சின் தெரிவித்துள்ளார் • SHARE

  விவரம் காண

  இவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் – கசிந்த தகவல்

  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரப்போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின்...

  தோனியை கிண்டலடிக்க உனக்கு என்ன தகுதி? இங்கிலாந்து வீரரை விளாசிய ரசிகர்கள்!!

  தோனியின் இராணுவ முடிவு குறித்து கிண்டலடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர்கள் டேவிட் லாய்டை ட்விட்டரில் பொரிந்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். உலகக் கோப்பை...

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? தோனியை கிண்டலாகப் பேசிய இங்கிலாந்து வீரர்!!

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? என்ற வண்ணம் தோனியை கிண்டலடித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் டேவிட் லாய்டு. உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு...

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் !!

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் கே.எல் ராகுல் கேட்டு கொண்டதற்காகவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய...

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் !!

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3...