நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஜடேஜாவை விட அஸ்வினுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் மைக்கெல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

ஜடேஜா தேவை இல்லை… இவரை எடுங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 2

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மைக்கெல் ஹோல்டிங், இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஜடேஜாவை விட அஸிவினுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜடேஜா தேவை இல்லை… இவரை எடுங்கள்; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 3

இது குறித்து மைக்கெல் ஹோல்டிங் பேசுகையில், “இறுதி போட்டி நடைபெற உள்ள ஆடுகளத்தின் தன்மையே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும், ஆனால் ஆடுகளம் எப்படி இருந்தாலும் அதை சமாளித்து இந்திய அணியால் சிறப்பாக பந்துவீச முடியும். வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும், இல்லையெனில் ஒரு சுழற்பந்து வீச்சாளரே போதும். என்னை பொறுத்தவரையில் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் தான் களமிறங்கும் என நினைக்கிறேன், அது அஸ்வினாக தான் இருக்க வேண்டும். அஸ்வின் தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அஸ்வின் சிறப்பாக செயல்படக்கூடியவர். அஸ்வினுக்கு இடம் கொடுத்தால் அது இந்திய அணிக்கும் பயனளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *