இந்தியா த்ரில் வெற்றி 1

இந்தியா த்ரில் வெற்றி

முதல் இன்னிங்கசில் இந்தியாவிற்க்கு 237 ரன் இலக்காக வைத்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்யத் தொடங்கும் முன்பே மழை வரத் தொடங்கியது. பின்னர் ஆட்ட நேரத்திலும் மழை தொடந்து வந்ததால் 3 ஒவர்கள் குறைக்கப்பட்டது. மேலும், இந்தியாவின் இலக்கு 231ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடத்தொடங்கினர். 10 ஓவர்களில் 68 ரன் குவித்தனர் இருவரும் சேர்ந்து. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 45 பந்துகளில் 54 ரன்கள் அடித்து 15 ஒவர்களில் இந்தியா 109 ரன் எடுத்திருந்த நிலையில் அகிலா தனஞ்சயாவின் பந்தில் லெக் பிபோர் விக்கெட் ஆனார்.

இந்தியா த்ரில் வெற்றி 2

அடுத்து தவானும் அவர் பின்னரே சிரிவர்தனா பந்தில் 49 ரன் அடித்திருந்த நிலையில் மேத்யூஸ் கையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இங்கு ஆரம்பித்தது சரிவு. அகிலன் தனஞ்சயா ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

17வது ஓவரின் முதல் பந்தை எதிர் கொண்ட கேதர் ஜாதவ் ஆப் ஸ்பின்னர் பந்து என நினைத்து ஆட  அது நேராக மாறிச்சென்று அவரது ஸ்டெம்பை பதம் பார்த்தது. அதே ஓவரின் 3வது பந்தும் இதே போல வந்து விராட் கோலியின் ஸ்டெம்பையும் தூக்கியது. 6வது பந்தை எதிர் கொண்ட ராகுலும் அவரது ஸ்டெம்ப்பை தனஜயாவிடம் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இந்தியா த்ரில் வெற்றி 3

இந்த 17வது ஒவரில் 3 விக்கெட் எடுத்து ஆட்டத்தின் போக்கையே அப்படியே திருப்பினார் அகிலா தனஞ்சயா. பின்னர் அடுத்தடுத ஓவரில் மேலும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்சர் படேலையும் பெவிலியன் அனுப்பினார் அகிலா. ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி ஆடிவந்த இந்திய அணி 131க்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

ஆட்டத்தின் போக்கை மிக நன்றாக உணர்ந்த தோனி புவனேஷ்வர் குமாருடன் சேர்ந்து மெதுவாக தன் போக்கில் ஆட்டத்தை இந்திய பக்கம் திருப்பினார். மிகவும் பொருமையாக அனைத்து பந்துகளுக்கும் அவசரம் இல்லாமல் சரியான சாட்டுகளை தேர்வு செய்து ஆடியது இந்த ஜோடி. அங்கு அங்கு கிடைக்கும் ஒன்று இரண்டுகளை தேடித்தேடி எடுத்தது.

இது போன்ற தருணங்களில் மிக அருமையாக தனது திறமையை அடிக்கடி காட்டி வருபவர் தோனி. இந்த போட்டியிளும் தனது அனுபவத்தைக் காட்டினார் தோனி. மறுபக்கம் மிக அருமையாக ஆடி வந்தார் புவனேஷ்வர் குமார். 7 ஓவர்களுக்கு 36 ரன் அடிக்க வேண்டியிருந்த நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் 4 பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் புவனேஷ்வர் குமார். 77 பந்துகளில் அரை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த ஜோடி 100 ரன் அடித்தது.

இந்தியா த்ரில் வெற்றி 4

இந்தியா 3 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் பல சாதனைகளை தகர்த்தனர். இறிதியாக இந்தியா 16  பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 3 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் அகிலா தனஞ்சயா 10 ஓவர்களில் 54 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார் 80 பந்துகளில் 53 ரன் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். இத வெற்றியுடன் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published.