சாம்பியன்... இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது இந்திய மகளீர் படை !! 1
சாம்பியன்… இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது இந்திய மகளீர் படை

19வயதுகுட்பட்ட பெண்களுக்கான உலககக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

19வயதுகுட்பட்ட பெண்களுக்கான டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

சாம்பியன்... இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது இந்திய மகளீர் படை !! 2

உலக சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீராங்கனைகள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 17.1 ஓவரில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சாம்பியன்... இங்கிலாந்தை ஈசியாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது இந்திய மகளீர் படை !! 3

இந்திய பெண்கள் அணி சார்பில் அதிகபட்சமாக பிராஸ்வி சோப்ரா, அர்சனா தேவி மற்றும் சது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய மகளீர் அணி சவ்மியா திவாரி மற்றும் திரிஷா ஆகியோர் தலா 24* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 14வது ஓவர் முடிவில் இலக்கை எட்டிய இந்திய மகளீர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *