இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் வேதனை !! 1

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனாகா 39 ரன்களும், அஸ்லன்கா 38 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கருணாரத்னேன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 262 ரன்கள் குவித்தது.

இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் வேதனை !! 2

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், தீபக் சாஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் வேதனை !! 3

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்த ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அறிமுக வீரரான இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்துவிட்டு 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் வேதனை !! 4

இதன்பின் வந்த மணிஷ் பாண்டே 26 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் நங்கூரமாக நிலைத்து நின்று இலங்கை அணியின் பந்துவீச்சை இறுதி வரை அசால்டாக எதிர்கொண்ட ஷிகர் தவான் 95 பந்துகளில் 86* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 36.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான ஷனாகா, பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியிடம் நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு இது தான் காரணம்; இலங்கை கேப்டன் வேதனை !! 5

இது குறித்து இலங்கை அணியின் கேப்டனான ஷனாகா பேசுகையில், “பேட்டிங்கில் எங்களுக்கு சிறப்பான துவக்கமே கிடைத்தது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசியதால் எங்கள் பேட்ஸ்மேன்களால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள் விளையாடிய விதமே ஆக்ரோஷமாக இருந்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பது எங்களுக்கும் தெரியும், ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களை முன்னேற்றி கொள்ள வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளில் திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 20) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *