ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வலகிய 11 இந்திய வீரர்கள் ; முழு விவரம் இதோ ! 1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வலகிய 11 இந்திய வீரர்கள் ; முழு விவரம் இதோ !

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியும் டி20 தொடரை இந்திய அணியும் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து நடைபெறு வரும் 4 டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வலகிய 11 இந்திய வீரர்கள் ; முழு விவரம் இதோ ! 2

மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. இதனால் டெஸ்டில் போட்டியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 15 – 19 வரை பிரிஸ்பேன் தி காபா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த நீண்ட தொடரில் இந்திய வீரர்கள் பலர் தொடர்ந்து காயமடைந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வலகிய 11 இந்திய வீரர்கள் ; முழு விவரம் இதோ ! 3

முதலில் ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கவில்லை. இதையடுத்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத் தொடரில் இடம்பிடித்து காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முற்றிலும் வெளியேறினார். இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி தன் மனைவியின் கர்பம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிவுடன் நாடு திரும்பினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலிருந்து வலகிய 11 இந்திய வீரர்கள் ; முழு விவரம் இதோ ! 4

இவரை தொடர்ந்து முகமது ஷமியும் காயம் காரணமாக முதல் போட்டிவுடன் விலகினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யுமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டு விலகினார். பயிற்சி ஆட்டத்தின் போது கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்டில் வெளியேறினர். மூன்றாவது டெஸ்டில் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் நான்காவது டெஸ்டில் ஜடேஜா மற்றும் விஹாரி வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *