JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

லார்ட்ஸில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் முன்னதாகவே இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு மதிய உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெறுகிறது. இன்று இந்திய நேரப்படி பிற்பகல் தொடங்க இருந்த போட்டி, மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழை நிற்க, இரு அணி வீரர்களும் காத்திருந்தனர்.

ஆனால் தொடர்ந்து பெய்து வந்த மழையால், முன்னதாகவே மதிய உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது. லார்ட்ஸில் இருந்து வெளியாகியுள்ள செய்தியில், தற்போதைக்கு மழை நிற்கும் அறிகுறியே தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால், இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

லார்ட்ஸ் டெஸ்ட்- மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 31 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்படும். ஆனால் லார்ட்ஸில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் இளம் வீரரான போப் அறிமுகமாகிறார்.

 

இந்திய லெவன்: முரளி விஜய், ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி, ரஹானே, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

இங்கிலாந்து லெவன் : அலஸ்டெய்ர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பியர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான், அதில் ரஷிட், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதனையடுத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

போட்டி துவங்கும் முன்னரே இந்திய ஆடும் லெவன் லீக் !! 1

இந்தப் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்படுவது லார்ட்ஸ் மைதானம். இந்த மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம்தான்.

போட்டி துவங்கும் முன்னரே இந்திய ஆடும் லெவன் லீக் !! 2

இதுவரை, லார்ட்ஸ் மைதானத்தில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 11 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை கபில் தேவை தலைமையிலும் தோனி தலைமையிலுமான இந்திய அணி மட்டுமே வெற்றிக் கண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. • SHARE
 • விவரம் காண

  பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

  வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

  இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...