நீ வேற லெவல்டா தம்பி; இளம் வீரரை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் !! 1

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் வீரர் நிக்கோலஸ் பூரனை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நீ வேற லெவல்டா தம்பி; இளம் வீரரை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் வந்த ஸ்ரேயஸ் ஐயர் (14), ரிஷப் பண்ட் (14) ஸ்டோய்னிஸ் (9), ஹெய்ட்மர் (10) என டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் டெல்லி அணியின் மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவான் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 61 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 164 ரன்கள் எடுத்தது.

நீ வேற லெவல்டா தம்பி; இளம் வீரரை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் !! 3

இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு துவக்கம் சரியாக அமையவிட்டாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 28 பந்துகளில் 53 ரன்களும், கிரிஸ் கெய்ல் 13 பந்துகளில் 29 ரன்களும், மேக்ஸ்வெல் 32 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 19வது ஓவரிலேயே இலக்கை அடைந்த பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனை, முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நீ வேற லெவல்டா தம்பி; இளம் வீரரை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் !! 4

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “நிக்கோலஸ் பூரனின் ஆட்டம் முன்னாள் தென் ஆப்ரிக்கா வீரர் ஜே. பி டுமினியை தனக்கு நியாபகப்படுத்துவதாக” தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *