ரிஷப் பன்ட் 3 விதமான போட்டிகளிலும் ஆட வேண்டும்: சவுரவ் கங்குலி 1

ரிஷப் பன்ட் 3 விதமான போட்டிகளிலும் ஆட வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்ததால், சதத்தை நெருங்கும்போது சற்று பதற்றமாக இருந்தது என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.

விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதனால் இன்று சதத்தை நெருங்கும்போது சற்று பற்றமாக இருந்தது என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.ரிஷப் பன்ட் 3 விதமான போட்டிகளிலும் ஆட வேண்டும்: சவுரவ் கங்குலி 2

இதுகுறித்து ரிஷப் பந்து கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவில் விளையாடும்போது இரண்டுமுறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டேன்.

இதனால் இன்றைய போட்டியில் 90-ஐ தாண்டும்போது சற்று பதற்றமாக இருந்தது. இதனால் சற்று பயமாகவும் இருந்தது. இருந்தாலும் வெற்றிகரமாக சதம் அடித்தேன். சதம் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்திய என்னுடைய ஸ்டைலை நான் விரும்புகிறேன்.

நான் அதேபோல் செய்வேன் என்று நினைத்தது கிடையாது. ஆனால் சந்தோசத்தை வெளிப்படுத்தும்போது தானாக வெளியாகிறது’’ என்றார் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.ரிஷப் பன்ட் 3 விதமான போட்டிகளிலும் ஆட வேண்டும்: சவுரவ் கங்குலி 3

அத்துடன் வெளிநாட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டோனியை பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன் பரூக் இன்ஜினீயர் அடிலெய்டில் 89 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கிரண் மோரே ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், பார்தீவ் பட்டேல் 62 ரன்களும், எம்எஸ் டோனி ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் அடித்துள்ளனர்.

இதற்கு முன் எம்எஸ் டோனி பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் அடித்ததுதான் வெளிநாட்டு மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் சேர்த்து முதல் இடம்பிடித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *