இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

இதன் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில் இந்திய அணி 7.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அகமதாபாத் பிட்ச் குறித்து பேசியிருக்கிறார். விராட் கோலியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி “ அகமதாபாத் பிட்ச் மோசமாக இருந்தது என்று சொல்ல முடியாது. இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் இரண்டு நாட்களுக்கு பிட்ச் பேட்டிங் செய்வதற்கு ஏற்றவாறு தான் இருந்தது. 30 விக்கெட்களில் 21 விக்கெட்டுகள் நேராக வந்த பந்து மூலம் வீழ்த்தப்பட்டது.
டெஸ்ட் போட்டியில் தடுப்பு ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஆனால் பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை. இதனால்தான் விக்கெட்கள் வீழ்ந்தது” என்று கூறியிருக்கிறார். விராட் கோலியின் இந்த கருத்திற்கு முன்னாள் வீரர்கள் அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டார் குக் மற்றும் டேவிட் லைய்டும் இந்திய கேப்டன் விராட் கோலியின் கருத்திற்கு விமர்சனம் செய்துள்ளனர். விராட் கோலி இந்த பிட்ச் குறித்து பேசுவது சரியில்லை. அந்த பிட்சின் பராமரிப்பாளர்கள் தான் இதில் என்ன பிரச்சினை என்று கண்டு பிடித்து கூற வேண்டும். பிட்சிற்கு விராட் கோலி சப்போர்ட் செய்வது சரியானது இல்லை என்று இங்கிலாந்து வீரர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.