மீண்டும் பந்துவீச்சில் ருத்திரதாண்டவம்.., அக்சர் பட்டேல், அஸ்வின், சிராஜ் ஆதிக்கம் ! 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும்  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தன.

ஆனால் ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்ற  3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.

மீண்டும் பந்துவீச்சில் ருத்திரதாண்டவம்.., அக்சர் பட்டேல், அஸ்வின், சிராஜ் ஆதிக்கம் ! 2

இதையடுத்து, 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 4) காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இந்த 4வது டெஸ்ட் போட்டியும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்து வந்த இங்கிலாந்து அணி 30 ரன்கள் குவிப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான சிப்லி மற்றும் கிராவ்லி ஆகியோரின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் வீழ்த்தி அசத்தினார். இதில் சிப்லி 2 ரன்களுடன் கிராவ்லி 9 ரன்களுடன் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை இந்திய இளம் வீரர் முகமது சிராஜ் வீழ்த்தினார்.

மீண்டும் பந்துவீச்சில் ருத்திரதாண்டவம்.., அக்சர் பட்டேல், அஸ்வின், சிராஜ் ஆதிக்கம் ! 3

இதையடுத்து ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால் பேர்ஸ்டோவ் சிராஜின் பந்துவீச்சில் 28 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து ஸ்டோக்ஸ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோக்ஸின்(55) விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய லாரன்ஸ் 46 ரன்கள் குவித்து விக்கெட் இழந்தார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டையும் இழந்து 205 ரன்கள் குவித்தனர். இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக விளையாடினர். இந்திய பந்துவீச்சாளர்கள் அக்சர் பட்டேல் 4 விக்கெட்கள், அஸ்வின் 3 விக்கெட்கள், சிராஜ் 2 விக்கெட்கள், சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் இங்கிலாந்து வீரர்கள் இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறினர்.

மீண்டும் பந்துவீச்சில் ருத்திரதாண்டவம்.., அக்சர் பட்டேல், அஸ்வின், சிராஜ் ஆதிக்கம் ! 4

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 24 ரன்கள் குவித்து 1 விக்கெட் இழந்திருக்கின்றனர். சுப்மன் கில் தான் விக்கெட் இழந்திருக்கிறார். தற்போது ரோகித் 8 ரன்களும் புஜாரா 15 ரன்களும் குவித்து களத்தில் இருக்கின்றனர். இவர்கள் நாளை நடைபெறும் போட்டியில் களமிறங்குவார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *