ரோஹித் சர்மா கேப்டன்… முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

முத்தரப்பு தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம்  ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- வங்கதேச அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- வங்கதேச, 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-வங்கதேசம், 16 ஆம் தேதி இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில்  முன்னாள் கேப்டன் தோனி மற்று9ம் இந்நாள் கேப்டன் கோஹ்லி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் பும்ராஹ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. தீபக் ஹூடா, விஜய் சங்கர், வாசிங்டன் சுந்தர், போன்ற இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, தவான், கே.எல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூட, வாசிங்டன் சுந்தர், சாஹல், அக்சர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனாட்கட், முகமது சிராஜ், ரிஷப் பண்ட்.

  • SHARE

  விவரம் காண

  இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் !!

  இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில்...

  பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போருக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் !!

  பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் போருக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 15ம் தேதி ஐக்கிய அரபு...

  தோனி டக் அவுட் ஆனவுடன் ஏமாற்றம் தாங்காமால் மைதானத்தில் இருக்கும் சேர்களை உடைக்கும் இந்திய சிறுவன் – வைரல் வீடியோ

  ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடர் துபாயில்...

  ஹாங்காங்கிற்கு எதிராக டக் அவுட் ஆன தோனி – ட்விட்டரில் கவலையுடன் கலாய்க்கும் ரசிகர்கள்!

  ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தவான், அம்பதி ராயுடு ஆட்டத்தால் ஹாங் காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. ஆசிய கோப்பை ஒருநாள்...

  சிகர் தவான் அதிரடி சதம்: ட்விட்டரில் வாழ்த்திய ரசிகர்கள்! ஹாங்காங்கிற்கு 286 ரன் இலக்கு!

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஹாங் காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் சதம் அடித்தார். ஆசிய கோப்பை ஒருநாள்...