Cricket, India, Yuvraj Singh, Suresh Raina, Virat Kohli

ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை

இந்திய அணியின் தூணாக விளங்கிய சுரேஷ் ரெய்னா தற்போது அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். 2008ல் இருந்து இந்திய அணியின் லிமிட்டெட் ஓவர் அணியில் ஒரு ஒரு மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தார். தற்போது ரெய்னாவின் வாழ்க்கை அவ்வளவு தானா என்ற கேள்வியும் எழுந்துவருகிறது.

இந்த பரிதாபகரமான நிலையேள்ளாம் ரெய்னாவிற்க்கு கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரில் இருந்து தான் ஆரம்பமானது.

அந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு அரை சதத்துடன் 100க்கும் குறைவான ரன் எடுத்ததே அவருக்கு தலைவலியை ஏற்ப்படுத்தி வெளியேற்றத்திற்க்கான வாயிற்கதவை துறந்து வைத்தது.

அதே போல் தன் 2106 முழுவதும் ஃபாம் இல்லாமல் சமாளித்துள்ளார் ரெய்னா. 2106டி20 உலகக்கோப்பையிலும் சோபிக்கத்தவறினார் ரெய்னா.

தற்போது புச்சி பாபு தொடரிலும் உத்திரபிரதேச அணிக்காக வெரும் 9 ரன் மட்டுமே அடித்துள்ளார் ரெய்னா.

ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தானா?

கடந்த சில வருடங்களாகவே இந்திய ஒரு நாள் அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இதற்க்கு காரணம் அவருடைய உடர் தகுதி இன்மை மற்றும் அணியில் பல திறமையான இளம் வீரர்களின் வருகையாகும்.

ரெய்னா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக கடந்த 2014ல் விளையாடி இருந்தாலும், அவர் இப்போதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் பங்கு பெறும் அணியில் மிக முக்கியமான வீரர் ஆவார். ஆனால் கடந்த வருடங்களாகவே இந்திய அணியில்   நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்.

ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தானா? 1

அவர் இடத்தைப்  பல திறமையான இளம் வீரர்கள் அவ்வப்போது பிடிர்த்தனர். ஒருநாள் அவர் இடம் நிரந்தரம் இல்லை.

ஆனால் எப்போதும் டி20 அணியில் இடம் பெற்று வந்தார்.

இந்தியாவின் தற்ப்போதைய ஒருநாள் அணி திறமைக்கு குறைவில்லாத இளம் வீரர்களையும் அனுபவம் வாய்ந்த தலைமை வீரர்களையும் பெற்று சரியான விதத்தில் இருபதால் சுரேஷ் ரெய்னாவிற்க்கு ஒரு நாள் அணியில் இடம் பிடிப்பது சற்றே கடினமான வேலையாக இருக்கும்.

ரெய்னா கடைசியாக ஒருநாள் போட்டியில் விலையாடியது 2015இல் தென்னப்ரிக்கவிற்கு எதிராக மும்பையில்.

பின்னர் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் அவர் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் காய்சல் காரணமாக தொடரில் இருந்து விளகினார் என்பது குறிப்பிடதக்கது.

ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தானா? 2
(Photo: IANS)

அதற்கு பின்னர் நடந்த இங்கிலந்திற்க்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.

ஆனலும் டி20 தொடரில் கலக்கிய அவர் 104 ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் ஆனார்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியதிர்க்கும் ரெய்னா விற்க்கும் விரோத போக்கு சமீபத்தில் தொடங்கியது.

சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரில் அவர் வெறும் மூன்று போட்டிகள் மட்டுமே ஆடிய அவர் மீதம் இருந்த போட்டிகளில் இருந்து விளகினார்.

ஆனால் அவரை இந்திய கட்டுபாட்டு வாரியம் அணைத்து உள்ளூர் தொடரிலும் ஆட பணித்தது. ரெய்னா சில குடும்ப வேலைகள் காரணமாக BCCI கூறியதை ஏற்க்கவில்லை.

இதன் காரணாமாக கோபமடைந்த இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அவருக்கு வழங்கப்படும் அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தானா? 3
(Photo Source: BCCI)

மேலும் ரெய்னா இங்கிலாந்தில் நடந்த சாம்பியென்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியிலும் தனது இடத்தை மணிஷ் பாண்டே விடம் இழந்தார்.

பின்னர் அந்த இடம் தினேஷ் கார்த்திக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது உடற்தகுதி தேர்வில் தேறினாலும் அவர் இழந்த இடத்தை மீண்டும் அடைய மிகக் கடுமையாக போராட வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *