கேட்ச் பிடிக்க தெரியுதா, பேட் பண்ண தெரியுதா ? ஆனா அஸ்வினை வம்பிழுக்க தெரியுது ! – ட்ரோலில் சிக்கிய ஆஸி. கேப்டன் !
3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்து இருந்தனர். ஸ்டீவ் ஸ்மித்(131), புகோவ்ஸ்கி (62) மற்றும் லாபுசாக்னே (91) ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதில் ஸ்மித் 81, மார்னஸ் 73 மற்றும் கிரீன் 84 ரன்களைக் குவித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. இறுதி நாள் போட்டியில் புஜாரா 77 ரன்களும் ரிஷப் பந்த் 97 ரன்கள் குவித்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதன் பிறகு விஹாரி (23) மற்றும் அஸ்வின் (39) ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி சிறப்பான முடிவை கொடுத்தனர்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கில் 1, 39 வீரர்கள் மட்டும் எடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து டிம் பெய்ன் மூன்று கேட்ச்களை தவறவிட்டார். இவரை தொடர்ந்து லபுசாக்னேவும் ஒரு கேட்சை தவறவிட்டது இந்திய அணிக்கு பெரிய வாய்ப்பாக இருந்தது. ரிஷப் பண்ட் மற்றும் விஹாரியின் கேட்ச்களை டிம் பெய்ன் தவறவிட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது டிம் பெய்ன் தொடர்ச்சியாக ஸ்லெட்ஜிங் செய்து வந்தார். இதற்கு அஸ்வின் வெறித்தனமாக பதிலடி தொடுத்து டிம் பெய்ன்னை வாயடைக்க வைத்தார். இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் டிம் பெய்ன்னை டுவிட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். கேட்ச் பிடிக்க தெரியவில்லை, பேட் பண்ண தெரியவில்லை. ஆனா அஸ்வினை வம்பிழுக்க தெரிகிறது என்று டிம் பெய்ன்னை டுவிட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர்.