சென்னை வீரருக்கு அணியில் இடம்; இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ஜூலை 13ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வீரருக்கு அணியில் இடம்; இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

இலங்கை அணியுடனான தொடர் நடைபெறும் அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளதால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கும், இளம் இந்திய படையை இலங்கைக்கும் அனுப்ப பிசிசிஐ., திட்டமிட்டிருந்தது.

இந்தநிலையில், இலங்கை அணியுடனான தொடரருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது. 20 வீரர்களும், 5 நெட் பவுலர்களும் என மொத்தம் 25 பேர் கொண்ட அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

சென்னை வீரருக்கு அணியில் இடம்; இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாததால், இந்த தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். மற்றொரு துவக்க வீரராக ப்ரித்வி ஷா இடம்பெற்றுள்ளார். அதே போல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தட் படிக்கல்லிற்கும், சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இது தவிர பேட்ஸ்மேன்கள் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நிதிஷ் ராணா, சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஆகியோருக்கும், விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

சென்னை வீரருக்கு அணியில் இடம்; இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 4

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், க்ரூணல் பாண்டியா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் சாஹ்ல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி மற்றும் சேட்டன் சக்காரியா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

சென்னை வீரருக்கு அணியில் இடம்; இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 5

அர்ஸ்தீப் சிங், இஷான் போரல், சந்தீப் வாரியர், சாய் கிஷோர் மற்றும் சிம்ரன்ஜீட் சிங் ஆகியோர் நெட் பவுலர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை தொடருக்கான இந்திய அணி;

ஷிகர் தவான் (கேப்டன்), ப்ரித்வி ஷா, தேவ்தட் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கவுதம், க்ரூணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சனி, சேட்டன் சக்காரியா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *