இப்படி ஆகிடுச்சே… புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 1

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெறாததற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது.

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. கடைசியாக கடந்த 2108ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக இழந்ததால், எதிர்வரும் டெஸ்ட் தொடருக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இப்படி ஆகிடுச்சே… புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 2

2018ல் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க இந்திய அணியும், கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை மிக மோசமாக இழந்ததற்கு பழி தீர்க்கும் முனைபில் இங்கிலாந்து அணியும் இந்த தொடரை எதிர்கொள்ளும் என்பதால், இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்களுக்கு பலருக்கு இடம் கிடைத்திருந்தாலும், இந்திய அணியின் முக்கிய வீரரான புவனேஷ்வர் குமாரின் பெயர் அணியில் இடம்பெறாதது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இப்படி ஆகிடுச்சே… புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 3

புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களுக்கு தெரிந்த காரணங்களை கூறி வரும் நிலையில், புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெறாததற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஐந்து போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இன்னும் அவர் உடற்தகுதி பெறவில்லை. காயத்திற்கு பிறகு அவர் முதல்-தர போட்டியில் விளையாடவில்லை.

இப்படி ஆகிடுச்சே… புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 4

டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் (ஸ்பெல்) பந்து வீச வேண்டியிருக்கும். அதற்கு புவி இன்னும் தயாராக வில்லை என்பதால் சேர்க்கப்படவில்லை.

அதிரடி (டெத் ஓவர்) ஓவரில் அற்புதமாக பந்து வீசும் புவனேஷ்வர் குமார் ஒயிட்பால் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடுகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *