Cricket, India, Sri Lanka, South Africa, Virat Kohli

சொந்த மண்ணில் கலக்கி வரும் இந்திய அணி, நம்பர் 1 டெஸ்ட் அணி என்று நிரூபிக்க வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டும். இனி தான் இந்திய அணிக்கு சவாலான தொடர்கள் காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சென்று இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த சவாலான தொடர் ஜனவரி 2018இல் தென்னாபிரிக்கா தொடரில் இருந்து தொடர்கிறது. இதுவரை தென்னாபிரிக்காவில் ஒருமுறை கூட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால், எட்டு டெஸ்ட் தொடர் மற்றும் தற்போது இலங்கை அணியுடன் வெற்றி பெறும் தொடர் என இந்திய அணி அட்டகாசம் செய்து வருவதால், இந்த தொடர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும்.

கடந்த சில வருடங்களில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை என அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது இந்திய அணி. இந்த நேரத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் மட்டுமே வெற்றி பெறுகிறது என இந்திய அணியை கேவலப்படுத்துகிறார்கள். இதனால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெறவேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறது.

தற்போது இலங்கை அணியுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவிப்பார்கள் என தகவல் வந்தது.

இந்நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட இந்த டெஸ்ட் அணியை நாம் எதிர்பார்க்கலாம்.

தொடக்கவீரர்கள்:

லோகேஷ் ராகுல்

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 1

ஒருநாள் போட்டிகளில் சொதப்புவது போல் இல்லாமல், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார் லோகேஷ் ராகுல். இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு இடத்தையும் ஒதுக்கிவிட்டார் லோகேஷ் ராகுல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ந்து ஆறு அரைசதங்கள் அடித்துள்ளார். இதனால், ஒரு சவாலான தொடரில் இவர் கண்டிப்பாக இந்திய அணியில் இருப்பார்.

ஷிகர் தவான்

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 2

டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க திணறிய தவான், இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்ததும், அதை அற்புதமாக பயன் படுத்தி கொண்டு தொடர் நாயகன் விருதை வென்றார் தவான். தற்போது நடந்து கொண்டிருக்கும் இலங்கை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 94 ரன் அடித்து அசத்தினார்.

முரளி விஜய்

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 3

காயம் காரணமாக எட்டு மாதம் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய முரளி விஜய், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 128 ரன் அடித்தார். இந்திய டெஸ்ட் அணிக்கு ஐவரும் ஒரு முக்கியமான வீரர் ஆவார்.

நடுவரிசை:

செதேஸ்வர் புஜாரா

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 4

இந்திய டெஸ்ட் அணியின் ஒரு முக்கியமான வீரர் செதேஸ்வர் புஜாரா. இவர் கண்டிப்பாக தென்னாபிரிக்கா தொடரில் தான் யார் என்று நிரூபிக்க வேண்டும். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு சென்று விளையாடிய போது புஜாரா சொதப்பினார். ஆனால், செதேஸ்வர் புஜாரா செம்ம பார்மில் இருக்கிறார்.

விராட் கோலி (கேப்டன்)

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 5

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், இரட்டை சதம் என அடித்து விளாசுகிறார். இதே பார்முடன் தென்னாப்ரிக்காவுடன் அணியுடன் அவர் விளையாட வேண்டும்.

அஜிங்க்யா ரஹானே

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 6மற்ற வீரர்களை போல் இல்லாமல், இலங்கை தொடரில் சொதப்பி வருகிறார் அஜிங்க்யா ரஹானே. ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய அஜிங்க்யா ரஹானே, இலங்கை தொடரில் இரண்டு முறை டக் அவுட் ஆனார். ஆனால், இவரது திறமையே வெளிநாட்டில் அசத்துவது தான். இதனால், கண்டிப்பாக இவர் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்.

ரோஹித் சர்மா

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 7

ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா, முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து அசத்தினார். இவரும் தெறி பார்மில் உள்ளதால், தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இவர் விளையாட வாய்ப்பு உள்ளது.

வ்ரிதிமான் சஹா

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 8

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றதில் இருந்து, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல் படுகிறார் வ்ரிதிமான் சஹா. இதனால், சவாலான தென்னாபிரிக்கா தொடரில் இவரும் விளையாடுவார்.

ஆல்-ரவுண்டர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள்

தென்னாபிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் , ஹர்டிக் பாண்டியா தான் முக்கிய வீரராக இருப்பார். அவருக்கு துணையாக சுழற்பந்து வீச்சாளர்கள் – ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருப்பார்கள்.

ஹர்டிக் பாண்டியாஇந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 9

ரவிச்சந்திரன் அஸ்வின்இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 10

ரவீந்திர ஜடேஜாஇந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 11

வேகப்பந்து வீச்சாளர்கள்:

தென்னாபிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் கண்டிப்பாக இருப்பார்கள். கூடுதலாக இன்னொரு சிறந்த பந்து வீச்சாளர் ஜேஸ்ப்ரிட் பும்ரா இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

முகமது ஷமி

இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 12

உமேஷ் யாதவ்இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 13

இஷாந்த் சர்மாஇந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 14

புவனேஸ்வர் குமார்இந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 15

ஜேஸ்ப்ரிட் பும்ராஇந்தியா vs தென்னாபிரிக்கா 2018: டெஸ்ட் தொடருக்கு எதிர்பார்க்கும் இந்திய அணி 16

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *