வாய வச்சுட்டு சும்மா இருந்தாலே உனக்கான வாய்ப்பு தேடி வரும்;ராகுல் திவாட்டியாவை விமர்சித்த கிரீம் ஸ்மித் !! 1

டுவிட்டரில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு போட்டியில் கவனம் செலுத்தினால் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று ராகுல் டிவாட்டியாவை முன்னாள் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.

 

தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு டி.20 தொடருக்கு பிறகு இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான தொடரில் பங்கேற்க உள்ளது.

 

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வாய வச்சுட்டு சும்மா இருந்தாலே உனக்கான வாய்ப்பு தேடி வரும்;ராகுல் திவாட்டியாவை விமர்சித்த கிரீம் ஸ்மித் !! 2

சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்திற்கு செல்வதால் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற பல இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிபாட்டிக்கும் முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வாய வச்சுட்டு சும்மா இருந்தாலே உனக்கான வாய்ப்பு தேடி வரும்;ராகுல் திவாட்டியாவை விமர்சித்த கிரீம் ஸ்மித் !! 3

ராகுல் த்ரிபாட்டி, உம்ரன் மாலிக் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்திருந்தாலும் பெரிதும் எதி்பார்க்கப்பட்ட தவான்,ராகுல் டிவாட்டியா போன்ற வீரர்களுக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் 2021,2022 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணிக்கு அசத்தல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ராகுல் டிவாடியா தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எதிர்பார்ப்புகள் மிகுந்த வேதனையை அளித்து விட்டது’ என்று பதிவிட்டிருந்தார்.

ஒருபுறம் அது உண்மை என்றாலும், இளம் வீரராக இருந்து இப்படி தேர்வாளர்கள் விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிடுவது தேவையில்லாதது என்று ராகுல் டிவாட்டியாவை முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், டிவாயாவின் இந்த செயலை விமர்சித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

வாய வச்சுட்டு சும்மா இருந்தாலே உனக்கான வாய்ப்பு தேடி வரும்;ராகுல் திவாட்டியாவை விமர்சித்த கிரீம் ஸ்மித் !! 4

இதுகுறித்து கிரீம் ஸ்மித் பேசுகையில், பல திறமையான வீரர்களை கொண்டதால் இந்திய அணியில் வீரர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடுமையாக உள்ளது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய மைதானத்திர்க்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்கிறார்கள், நான் தற்பொழுது சொல்வதெல்லாம் டிவிட்டரில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தன்னுடைய அடுத்த இலக்கை நோக்கி கவனம் செலுத்தினால் நிச்சயம் உங்களுக்கான இடம் கிடைக்கும் என்று ராகுல் டிவாடியாவை மறைமுகமாக கிரீம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.

 

 

Leave a comment

Your email address will not be published.