தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடர் கடைவிறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 53-வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
அணிகள் விவரம்:
குஜராத் லயன்ஸ் – டுவைன் ஸ்மித், இஷான் கிஷான், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர், பிரதீப் சங்வான், பிரவீன் குமார், முனாப் பட்டேல், அன்கிட் சோனி.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், ஷிகர் தவான், மொய்சஸ் ஹென்றிக்ஸ், விஜய் ஷங்கர், நமன் ஓஜா, முகமது நபி, தீபக் ஹூடா, புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல், முகமது சிராஜ்.