Cricket, IPL 2017, IPL Final, MI, KKR, RPS, GL, DD

இந்தியன் பிரீமியர் லீக் இந்த உலகிலேயே புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடர் ஆகும். 2008-இல் இருந்து இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சில தேவையில்லாததை உருவாக்கி கொண்டிருக்கிறது, அதில் ஒன்று தான் இந்த சூதாட்டம்.

இந்த ஐபில்-இல் டெல்லி vs குஜராத் போட்டி பிக்சிங் என கூறியதற்காக கான்பூரில் 3 நபர்களை போலீஸ் கைது செய்தது. அடுத்து கே கொல்கத்தா vs மும்பை போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடு பட்டதால்,பேரை கைது செய்தது போலீஸ். அதை தொடர்ந்து பெட்டிங் காரணமாக டெல்லியில் 4 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ் அங்கிருந்த 2 கணினி, 22 தொலைபேசிகள், மற்றும் LCD-களை போலீஸ் பறிமுதல் செய்தது.

இதுமட்டும் இல்லாமல் டெல்லியில் உள்ள ரோகினி என்னும் பகுதியில் மும்பை vs புனேவுக்கு இடையிலான இறுதி போட்டியின்போது பெட்டிங் காரணமாக 9 பேரை போலீஸ் கைது செய்தது. அவர்களிடம் இருந்து 2 போட்டிகள் மற்றும் 10 தொலைபேசிகளை பறிமுதல் செய்தது போலீஸ்.

இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக ராஜஸ்தானில் ஐபில் பெட்டிங் காரணமாக, 43 தொலைபேசிகளுடன் 5 பேரை கைது செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 1.17 லட்சம் ரொக்க பணத்துடன் 4 பேரை கைது செய்தது போலீஸ்.

இந்த மாதிரி ஊழல், பெட்டிங் போன்றவற்றைகளை ஒழித்தால் தான், பிற்காலத்தில் ஐபில் செழிப்பாக இருக்கும்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *