ஹைதரபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை; கேன் வில்லியம்சன் சொல்கிறார் !! 1

ஹைதரபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை; கேன் வில்லியம்சன் சொல்கிறார்

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றாலும்,ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் இன்னும் நிறைய முன்னேற்றங்கள் தேவை என்று அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

ஹைதரபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை; கேன் வில்லியம்சன் சொல்கிறார் !! 2

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.

ஹைதரபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை; கேன் வில்லியம்சன் சொல்கிறார் !! 3

ஹைதரபாத் அணியில் கேன் வில்லியம்சன்(29), யூசுப் பதான்(29), மணிஷ் பாண்டே(16) மற்றும் முகமது நபி(14) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.4 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து வெறும் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே ஹைதராபாத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக திணறினர்.

ஹைதரபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை; கேன் வில்லியம்சன் சொல்கிறார் !! 4

சூர்யகுமார் யாதவ்(34), ஹர்திக் பாண்டியா(24) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் 10 ரன்களை கூட தாண்டமால் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 18.5 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் நிறைய முன்னேற்றங்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

ஹைதரபாத் அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை; கேன் வில்லியம்சன் சொல்கிறார் !! 5

இது குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவாது, “நிச்சயமாக இது எங்களுக்கு கடினமான போட்டி. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம், அவர்களின் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. முதலில் பேட்டிங் செய்த நாங்கள் குறைந்தது 140 ரன்களாவது எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம், ஆனால் 20 ரன்கள் குறைவாக வெறும் 120 ரன்களுக்கேள்ளே விக்கெட்டை இழந்துவிட்டோம். போட்டியின் இரண்டாவது பாதி எங்களுக்கு மிகவும் சாதமாக அமைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *