ராபின் உத்தப்பா மிக சிறந்த பேட்ஸ்மேன்; கிறிஸ் லின் புகழாரம் !! 1
ராபின் உத்தப்பா மிக சிறந்த பேட்ஸ்மேன்; கிறிஸ் லின் புகழாரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா உலகின் தலை சிறந்த வீரர் என்று அந்த அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தனது பேட்டிங் முறையை மாற்றிக் கொண்ட கொல்கத்தா தொடக்க வீரர் கிறிஸ் லின் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக 62 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வெற்றியை உறுதி செய்தார், இவருக்கு உறுதுணையாகவும் ஆட்டம் தொய்ந்து போகாமலும் ஆடியவர் ராபின் உத்தப்பா.

நேற்றைய ஆட்டம் குறித்து கிறிஸ் லின் கூறும்போது, “சவாலானதுதான், ஆனால் ஒரு வீரர் கடைசி வரை நிற்க வேண்டும். ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் பயனுள்ள பங்களிப்பு செய்தனர்.

புதிய பந்தில் ஆடுவதுதான் சுலபமானது, சுனில் நரைன் ஒரு முனையில் அழுத்தத்தை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறார்.

ராபின் உத்தப்பா மிக சிறந்த பேட்ஸ்மேன்; கிறிஸ் லின் புகழாரம் !! 2

அவர்களிடம் இரண்டு தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். பந்துகள் திரும்பின. தொடக்கத்தில் கொஞ்சம் ரன்களை சேர்க்க வேண்டியிருந்தது, அதனால் இது முறையான டி20 அதிரடி தொடக்கம் என்று கூறுவதற்கில்லை.

200% ஸ்ட்ரைக் ரேட் என்பது சவாலானது. கிரீசில் அதிக நேரம் செலவழித்ததால் நான் பிறகு விரைவில் ரன் சேர்க்க முடிகிறது.

ராபின் உத்தப்பா ஒரு கிளாஸ் பிளேயர் (class player), இறங்குகிறார், தன்னம்பிக்கையுடன் ஷாட்களை ஆடுகிறார். ஒருவர் ஒருமுனையில் இழுத்துப் பிடித்தால் மற்றொருவர் எதிர்முனையில் சில பவுண்டரிகளுடன் மீண்டும் ஆட்டத்தின் உத்வேகத்தை கூட்டமுடிகிறது.

ராபின் உத்தப்பா மிக சிறந்த பேட்ஸ்மேன்; கிறிஸ் லின் புகழாரம் !! 3

தினேஷ் கார்த்திக்கிற்கு இது புதிய அணி. அவர் விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் இன்னொரு முனையில் அவரால் பவுலர்களிடம் பேசுவது கடினம். எனவே உத்தப்பா இன்னும் கொஞ்சம் இந்த விஷயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் அது சிறப்பாக அமையும்” என்றார்

 

 

Leave a comment

Your email address will not be published.