இன்றைய போட்டியில் வெற்றிபெற போவது யார்..? இரு அணிகளும் ஒரு பார்வை !! 1

இன்றைய போட்டியில் வெற்றிபெற போவது யார்..? இரு அணிகளும் ஒரு பார்வை

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன..? இன்றைய போட்டியில்  வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

தேதி ; ஏப்ரல் 20

இடம்; மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன், புனே

நேரம்; இரவு 8 மணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 150+ ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற போவது யார்..? இரு அணிகளும் ஒரு பார்வை !! 2

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டு போட்டியில் பெற்ற வெற்றிக்கும் ஒரிரு வீரர்கள் மட்டுமே காரணம், இது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல முடியாத அளவிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சென்னை அணியின் பெரும்பாலான வீரர்கள் சொதப்பியே வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 160+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோக்ஸ், பட்லர், க்ளேசன், ஆர்சர் என நட்சத்திர வீரர்கள் பலரை உள்ளடக்கியுள்ள ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற போவது யார்..? இரு அணிகளும் ஒரு பார்வை !! 3

ஸ்டீவ் ஸ்மித் இந்த தொடரில் விளையாடததால் அவருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, ராஜஸ்தான் அணியை சிறப்பாகவே வழிநடத்தி வருகிறார் என்பதில் சந்தேகம். இருந்த போதிலும் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களை ரஹானே இன்னும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது. சில சில தவறுகளை ரஹானே சரி செய்து கொள்ளும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி பாதையை தடுப்பது அனைத்து அணிகளுக்கும் சவாலாகவே இருக்கும்.

 

எதிர்பார்க்கப்படும் முடிவு;

இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகள் தான் என்றாலும் கடந்த போட்டிகளின் முடிவுகளையும் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை வைத்து பார்க்கும் போதும் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம்.

Leave a comment

Your email address will not be published.