பாஸ்போர்ட்டை தொலைத்ததால் தாமதமாக இந்தியா வருகிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் !! 1

பாஸ்போர்ட்டை தொலைத்ததால் தாமதமாக இந்தியா வருகிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டி ஆர்கி ஷார்ட் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதால் அவர் அணியில் இணைய சில நாட்கள் ஆகும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின்  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

பாஸ்போர்ட்டை தொலைத்ததால் தாமதமாக இந்தியா வருகிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் !! 2

இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி ஆர்கி ஷார்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சில நாட்களுக்கு பிறகே இணைவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஷார்ட் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டதால் தான் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் இரண்டு ஆண்டு தடை செய்யப்பட்டு இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9ம் தேதி நடைபெறும் தனக்கான முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

பாஸ்போர்ட்டை தொலைத்ததால் தாமதமாக இந்தியா வருகிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் !! 3

இதே போல், தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கி கொண்ட ஸ்டீவ் ஸ்மித் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் இழந்ததால் அவருக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானேவும், ஸ்மித் இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் இளம் வீரர் ஹென்ரிச் க்ளேசனும் விளையாட உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட்டை தொலைத்ததால் தாமதமாக இந்தியா வருகிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் !! 4

இந்த தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனாட்கட், சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கவுதம், ஜாஸ் பட்லர், ரஹானே, டார்கி ஷார்ட், ராகுல் த்ரிப்பதி, தவால் குல்கர்னி, ஜாஹிர் கான் பக்தீன், பென் லாக்கின், ஸ்டூவர்ட் பின்னி, துஸ்மாந்தா சமீரா, அனிருட் சிங், அர்யமான் விக்ரம் பிர்லா, மிதுன், ஸ்ரேயஸ் கோபால், பிரசாந்த் சோப்ரா, ஜடின் சகினா, அன்கித் சர்மா, மஹிபால் லோமர், ஹென்ரிச் க்ளேசன்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *