தல தோனிக்கு நன்றி தெரிவித்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் !! 1
தல தோனிக்கு நன்றி தெரிவித்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்

ஐ.பி.எல் தொடரில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது ஒரு கனவு நிறைவேறிவிட்டதாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 178 ரன்கள் எடுத்தது.

தல தோனிக்கு நன்றி தெரிவித்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் !! 2

இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் 10 ரன்களில் விக்கெட்டை  இழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான சேன் வாட்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையையும் வென்றது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசிய சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தனது ஒரு கனவு நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தல தோனிக்கு நன்றி தெரிவித்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் !! 3

இது குறித்து தீபக் சாஹர் கூறியதாவது, “புதிய பந்தில் பந்துவீசுவது எனக்கு பிடித்தமானது. நான் எனது திறமையை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பிற்காக காத்திருந்தேன், அது இந்த வருடம் எனக்கு கிடைத்துவிட்டது. பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் என் மீது நம்பிக்கை வைத்து வைத்த தோனி பாய்க்கு எனது நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஐ.பி.எல் தொடரில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும், எனது ஒரு கனவு தற்போது நிறைவேறிவிட்டது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *