டூ பிளசிஸ் விளையாடுவது சந்தேகம்… அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் !! 1

டூ பிளசிஸ் விளையாடுவது சந்தேகம்… அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் காயமடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது.

டூ பிளசிஸ் விளையாடுவது சந்தேகம்… அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் !! 2
ADELAIDE, AUSTRALIA – NOVEMBER 23: Faf du Plessis of South Africa looks on during a South Africa training session at Adelaide Oval on November 23, 2016 in Adelaide, Australia. (Photo by Morne de Klerk/Getty Images)

இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு வருட தடை காலம் முடிந்து மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாக தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்பொழுதே உருவாகிவிட்டது, சென்னை அணியின் பயிற்சியை பார்க்கவே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.

டூ பிளசிஸ் விளையாடுவது சந்தேகம்… அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் !! 3

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ள சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணியுடான  டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் டூ பிளசிஸின் விரலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு சில நாட்கள் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

டூ பிளசிஸ் விளையாடுவது சந்தேகம்… அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் !! 4

கடந்த தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவரை இந்த தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்.டி.எம் கார்டு முறையை பயன்படுத்தி தனது அணியில் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டூவைன் பிராவோ, கர்ன் சர்மா, சேன் வாட்சன், ஷர்துல் தாகூர், அம்பத்தி ராயூடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூ பிளஸிஸ், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், நிகிதி, ஆசிஃப், ஜெகதீஷன், கன்சிக் செத், மோனு சிங், துருவ் சோரே, கிஷித் சர்மா, சைதன்யா பிசோனி.

Leave a comment

Your email address will not be published.