புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர் !! 1
Mumbai: Chennai Super Kings captain MS Dhoni and Sunrisers Hyderabad captain Kane Williamson with IPL 2018 trophy on the eve of the final match in Mumbai on May 26, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட்தொடரான ஐ.பி.எல் தொடர் ஒவ்வொரு வருடமும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது

மொத்தம் 60 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில்ஹைதராபத்அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்திய தோனிதலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மூன்றாவது முறையாககோப்பையை வென்று சரித்திரம்  படைத்தது.

புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர் !! 2

இரண்டு ஆண்டு தடை காலம் முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரி கொடுத்ததால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புடனே துவங்கிய இந்த தொடர் மற்ற தொடர்களை விட ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்ததுடன், பல சாதனைகளையும் புரிந்திருக்கிறது.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே, நடந்த முடிந்த ஐபிஎல் தொடரின் போதுதான் அதிகபட்ச பேஸ்புக் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மொத்தம் 42.5 கோடி பதிவுகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. அதற்கான எதிர்வினைகள், பின்னூட்டங்கள் என கோடிக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்துரையாடியுள்ளனர்.

புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர் !! 3

சென்னை அணியின் கேப்டன் தோனி பற்றியே அதிகமான பதிவுகள் / உரையாடல்கள் பகிரப்பட்டுள்ளன. அணிகளில், சென்னை அணி பற்றியே அதிகப் பதிவுகள் இருந்துள்ளன, அடுத்த இடங்களில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் உள்ளன என்று பேஸ்புக் தனது வலைப்பூ பதிவில் தெரிவித்துள்ளது.

தோனியைத் தவிர, ரெய்னா, விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா ஆகியோர் பற்றியும் அதிக பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 வெளியிடப்பட்ட ரிட்டர்ன் ஆஃப் தல மற்றும் விசில் போடு பாடல் தான் அதிகம் பேரால் விரும்பப்பட்ட பதிவாக இருக்கிறது.

புதிய மைல்கல்லை எட்டியது ஐ.பி.எல் டி.20 தொடர் !! 4
Mumbai: Chennai Super Kings captain MS Dhoni and Sunrisers Hyderabad captain Kane Williamson with IPL 2018 trophy on the eve of the final match in Mumbai on May 26, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

நடந்த முடிந்த 11வது ஐபிஎல் தொடரின் விளம்பரங்கள் மட்டும் பல ஆயிரம் கோடிக்கு சென்றிருக்கும் போலிருக்கிறது. கடந்த 10 வருடங்களாக சோனி இந்தியா நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது. 10 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் பிராண்ட் வேல்யூ பல மடங்கு அதிகரித்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *