ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்ன..? தோனி ஓபன் டாக் !! 1

ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்ன..? தோனி ஓபன் டாக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்துள்ள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

புனே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் 106 ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், பிராவோ 24 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்ன..? தோனி ஓபன் டாக் !! 2

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியின் மூன்று முக்கிய வீரர்களான ரஹானே(16), க்ளேசன்(7), சாம்சன்(2) என வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கூட்டணி சற்று நேரம் தாக்குபிடித்து நிதானமாக ரன் குவித்தது.

பட்லர் 22 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தது தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.3 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்ன..? தோனி ஓபன் டாக் !! 3

இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, விளையாட்டில் ஜொலிப்பதற்கு உடற்தகுதி மிகவும் அவசியம், இந்த போட்டி வித்தியமாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தோனி கூறியதாவது, “பொதுவாக பின்னால் இருந்து வந்து வெற்றி பெறுவோம், இந்தப் போட்டியில் நாங்கள் முன்னிலை வகித்தோம், இது எங்களுக்கு அன்னியமாகத் தோன்றுகிறது. எங்களில் பலர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவே உடற்தகுதி மிக முக்கியம்.

ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்ன..? தோனி ஓபன் டாக் !! 4

அனுபவம் கைகொடுக்கும், எங்களிடம் நல்ல பீல்டர்கள் உள்ளனர், ஆனால் உடல் தகுதியில் சிறப்பாகத் திகழ வேண்டும். மைதான மாற்றத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் நான் இங்கு புனே அணிக்காக ஆடும்போது ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவளித்தனர், இப்போது அவர்கள் அளித்த ஆதரவுக்கு அவர்களுக்கு மீண்டும் எங்களால் திருப்பி அளிக்க முடிகிறது என்பது திருப்தி அளிக்கிறது.

ஆம் இது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் புனே சூப்பர் கிங்ஸ் அல்ல. ஆனால் 7வது போட்டி முடிவில் இங்கு அதிகம் மஞ்சளைப் பார்க்கலாம். பிட்சைப் பொறுத்தவரை நான் உறுதியாக இல்லை. பவுன்ஸ் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தது. ஒரு மாதிரியான பஞ்சு போன்ற பவுன்ஸ். பேக் ஆஃப் லெந்த் பந்துகளை அடிப்பது சில வேளைகளில் கடினம்.

ராஜஸ்தான் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்ன..? தோனி ஓபன் டாக் !! 5

இன்று பேட்ஸ்மென்கள் பவுலர்களுக்கு பணியை எளிதாக்கினர். 200 ரன்கள் எடுத்தது பவுலர்கள் பணியை குறைக்கிறது, ஆனாலும் லைன் அண்ட் லெந்த், வேகத்தைக் கூட்டுவது குறைப்பது என்று ஸ்பின்னர்கள் வித்தியாசமாகச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். விரட்டும் போது முதல் 6 ஓவர்கள் முக்கியம்.

பிட்ச் நன்றாக இருந்தால் எந்த அணியும் முதலில் பேட் செய்யத் தயங்காது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.