கொல்கத்தா vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?  1
கொல்கத்தா vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

 ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன..? இரு அணியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கொல்கத்தா vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?  2
தேதி ; 21
நேரம் ; மாலை 4 மணி
இடம்; ஈடன் கார்டன் கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 190+ ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?  3

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முழு பலம் கொண்ட அணியாகவே உள்ளது. பேட்டிங்கில் கிறிஸ் லின், ரசல், ராணா என போட்டி போட்டு எதிரணிகளுக்கு பயம் காட்டி வரும் நிலையில், மறுபுறம் நரைன், சாவ்லா மற்றும் குல்தீப் யாதவ் தங்களது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பமனமாக விளங்கி வருகின்றனர்.

கொல்கத்தா vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?  4

அதே போல் வேகப்பந்து வீச்சில் டாம் குர்ரான், மற்றும் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்து வருகின்றனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 180+ ரன்கள் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

சரியான விக்கெட் கீப்பர் இல்லை என்பதை தவிர பஞ்சாப் அணியில் குறை சொல்வதற்கு வேறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. கெய்ல், ஆரோன் பின்ச்,  மில்லர் என அதிரடி ஆட்டத்திற்கு  பெயர் போன பல வீரர்களை தனது அணியில் வைத்துள்ள பஞ்சாப் அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

கொல்கத்தா vs பஞ்சாப்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..?  5

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் பஞ்சாப் அணி அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் என முழு பலம் கொண்ட அணியாகவே திகழ்ந்து வருகிறது.

எதிர்பார்க்கப்படும் முடிவு;

இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம பலம் கொண்டது என்பதால் இன்றைய போட்டியில் நிச்சயம் பரபப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதே வேளையில் இரு அணிகள் இடையேயான பலம் பலவீனம் மற்றும் பழைய போட்டிகளின் முடிவை வைத்து பார்க்கும் போது இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Leave a comment

Your email address will not be published.