சென்னை vs ஹைதராபாத்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ..?  1

சென்னை vs ஹைதராபாத்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ..?

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன..? இன்றைய போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 150+ ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை vs ஹைதராபாத்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ..?  2

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டு போட்டியில் பெற்ற வெற்றிக்கும் ஒரிரு வீரர்கள் மட்டுமே காரணம், இது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல முடியாத அளவிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சென்னை அணியின் பெரும்பாலான வீரர்கள் சொதப்பியே வருகின்றனர்.

ஹைதராபாத் அணி;

ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 160+ ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் டேவிட் வார்னர் இந்த தொடரில் விளையாடாதது ஹைதராபாத் அணிக்கு இழப்பு தான் என்றாலும், அவரது இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான முடிவு என்றும் நிச்சயம் வார்னரின் இடத்தை அவர் சரி செய்வார் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்து.ஆனால் ஹைதராபாத் அணி இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக சாஹாவையே துவக்க வீரராக களமிறக்கி வருகிறது.

சென்னை vs ஹைதராபாத்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ..?  3

இதே போல் மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்யும் பட்சத்தில் ஹைதரபாத் அணியால் சிறந்த இலக்கை நிர்ணயிக்க முடியும்.

சென்னை vs ஹைதராபாத்; இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ..?  4

பந்துவீச்சில் ஹைதரபாத் அணியின் பலத்தை சொல்லவே தேவையில்லை. புவனேஷ்வர் குமார், ரசீத் கான், சித்தார்த் கவுல் போன்ற இளம் வீரர்கள் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வெற்றி யாருக்கு.?

இன்றைய போட்டியில் களம் காண உள்ள இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம பலம் கொண்டது என்பதால் இன்றைய போட்டியில் நிச்சயம் பரபப்பிற்கு பஞ்சம் இருக்காது. அதே வேளையில் இரு அணிகளின் பலம், பலவீனம் மற்றும் பழைய போட்டிகளின் முடிவுகளை வைத்து பார்க்கும் போது சென்னை அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published.