டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது!! அணி விவரம் உள்ளே!! 1

சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஹர்பஜன்சிங் , ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், இம்ரான் தாகிர்

பெங்களூரு: குயின்டான் டி காக், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், மன்தீப்சிங், கோரி ஆண்டர்சன், வாஷிங்டன் சுந்தர், காலின் டி கிரான்ட்கோம், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் , யுஸ்வேந்திர சாஹல், பவான் நெகி

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது!! அணி விவரம் உள்ளே!! 2

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின் கடந்த கால சீசன்களில் இரு அணிகள் இடையிலான மோதல்கள் தீவிரமாகவே காணப்பட்டுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களிலும் சென்னை அணி விளையாடாத நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 21 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் சென்னை அணி 13 ஆட்டங்களிலும், பெங்களூரு 7 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. அதிலும் சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது.டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது!! அணி விவரம் உள்ளே!! 3

2 வருடங்களுக்கு பிறகு திரும்பி உள்ள சென்னை அணி, பெங்களூருவை விட வலுவாகவே உள்ளது. சென்னை அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. டி வில்லியர்ஸ் மிரட்டும் வகையிலான அதிரடிக்கு திரும்பி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக 39 பந்துகளில் 90 ரன்கள் விளாசி வெற்றியில் பிரதான பங்கு வகித்திருந்தார் டி வில்லியர்ஸ். அந்த ஆட்டத்தில் 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் டி வில்லியர்ஸ் ஒற்றை ஆளாக ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தனது அசாத்தியமான ஆட்டத்தால் வெற்றியை அறுவடை செய்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரளச் செய்யும் அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது!! அணி விவரம் உள்ளே!! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 ஆட்டங்களில் 4 ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்று நெருக்கமாகவே முடித்துள்ளது. இலக்கை துரத்திய 4 ஆட்டங்களில் 2-ல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஆட்டமும் கடைசி ஓவர் பரபரப்புக்கு விதிவிலக்காக அமையவில்லை. கடைசியாக மோதிய ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் குவித்த நிலையில் கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது சென்னை அணி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *