Cricket, India, IPL, IPL 2018, RCB, RCB Squad

11வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 8ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த வருடம் நடந்த ஐபில் சீசனில் கொல்கத்தா அணியுடன் 49 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனதால், அதற்கு பழி தீர்க்க முதல் போட்டியில் வெற்றி பெற காத்திருக்கும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி. இந்நிலையில், எதிர்பார்க்கும் பெங்களூரு அணியை பார்க்கலாம்.

பிரண்டன் மெக்கல்லம்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 1

2015ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற நியூஸிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம், அதன் பிறகு தொடர்ந்து உலகில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று வருகிறார். முதல் ஓவரில் இருந்து அதிக ரன்களை குவிக்க இவரது சேவை பெங்களூரு அணிக்கு தேவை.

குவிண்டன் டி காக்

Quinton De Kock

தென்னாபிரிக்கா அணியின் டி காக் 2016ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடினார். 2017ஆம் ஆண்டு காயம் காரணமாக ஐபில் இல் விளையாடாத டி காக், மீண்டும் பெங்களூரு அணி மூலம் ஐபில்-இல் ஒப்பந்தம் செய்துள்ளார்.

விராட் கோலி

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 2

பெங்களூரு அணியின் முதுகெலும்பான விராட் கோலி இந்த முறை கோப்பையை வெல்ல போராடுவார். கடந்த இரண்டு வருடங்களாக தொடக்கவீரராக களமிறங்கிய கோலி, இந்த முறை நம்பர் 1 இடத்தில் விளையாடுவார்.

ஏபி டி வில்லியர்ஸ்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 3

கடந்த சில வருடங்களாகவே பெங்களூரு அணிக்காக அற்புதமாக விளையாடி வரும் டி வில்லியர்ஸ், இந்த ஐபில் தொடர்களையும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

மந்தீப் சிங்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 4

இதற்கு முன்பு பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்த மந்தீப் சிங்கை, மீண்டும் அதே அணி 11வது ஐபில் தொடருக்கு வாங்கியது. நடுவரிசையில் அனுபவம் வாய்ந்த வீரராக இவர் களமிறங்குவார்.

சர்பராஸ் கான்

Sarfaraz Khan, Sarfaraz Khan RCB, RCB, IPL 2017, Cricket, Sarfaraz Khan IPL 2017

பெங்களூரு அணியின் இளம் சிங்கம் சர்பராஸ் கான் உடல் எடையை குறைக்க கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரில் விளையாட வில்லை. இந்த வருட ஐபில் தொடருக்கு இவரை பெங்களூரு அணி தக்கவைத்து கொண்டது.

கிறிஸ் வோக்ஸ்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 5

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தேவையான சமயத்தில் விக்கெட் எடுத்து தரும் திறமை கொண்டவர். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல், பேட்டிங்கிலும் தேவையான போது சில சிக்ஸர்கள் அடித்து ரன் எடுத்து கொடுப்பார்.

வாஷிங்டன் சுந்தர்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 6

தமிழக அணியின் நட்சத்திர இளம் ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி வாங்கியது. நிதாஹஸ் டிராபியில் பவர்-பிளே ஓவர்களில் அற்புதமாக வீசி எதிரணி வீரர்களை திணற வைத்தார் சுந்தர். அதே போல் பெங்களூரு அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்க படுகிறது.

யுஸ்வேந்த்ர சஹால்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 7

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சஹால் எதிரணியை சின்னாபின்னம் ஆக்குவதில் வல்லவர் என்று சொல்லலாம். அவர் சில சிக்ஸர்கள் கொடுத்தாலும், முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கும் திறமை கொண்டவர்.

உமேஷ் யாதவ்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 8

சமீபத்தில் டெஸ்ட் அணியில் இடத்தை விட்ட உமேஷ் யாதவ், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடினால் மீண்டும் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

முகமது சிராஜ்

ஐபில் 2018, போட்டி 3: கொல்கத்தா vs பெங்களூரு – எதிர்பார்க்கும் பெங்களூரு அணி 9

கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய முகமது சிராஜை பெங்களூரு அணி வாங்கியது. அதன் பிறகு இந்திய அணிக்காக விளையாடிய சிராஜ், ரன்னை மளமளவென வாரி கொடுக்கிறார். ஆனால், பந்துவீச்சு பயிற்சியாளர் நெஹ்ராவால் சிராஜின் பந்துவீச்சில் முன்னேற்றம் காணலாம்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *