டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 1

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 2) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 8 போட்டிகளில் 2இல் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. டெல்லி அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் டெல்லி அணி தொடர்ந்து வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. டெல்லி அணி இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் இந்த தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. எனவே இராஜஸ்தான் அணி உடனான இன்றைய போட்டி அந்த அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

டெல்லி அணியின் உத்தேச அணி

1.கோலின் முன்ரோ

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 2

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர், இன்றைய போட்டியிலும் அதனை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.

2.பிரித்வி ஷா

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 3

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக களமிறங்கிய இவர், அந்த போட்டியில் அதிரடியாக ஆடினார். இன்றைய போட்டியிலும் இவர் தனது அதிரடியை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது எதிரணிக்கு நெருக்கடியாக அமையும்.

  1. ரிஷப் பண்ட்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 4

இளம் வீரரான இவர் தன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். பெங்களூர், சென்னை அணிகளுக்கு எதிரான இவரின் சிறப்பான ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனை இனிவரும் போட்டிகளிலும் இவர் தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

  1. ஸ்ரேயஸ் ஐயர்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 5

டெல்லி அணியின் புதிய கேப்டனான இவர், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனை இந்த போட்டியிலும் தொடர்வார் எனலாம்.

  1. கிளன் மேக்ஸ்வெல்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 6

கடந்த தொடர்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் இந்த தொடரில் டெல்லி அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் இருப்பது டெல்லி அணிக்கு கூடுதல் பலமே. இதுவரை தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய இவர், இனிவரும் ஆட்டங்களில் அதனை செய்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

6.விஜய் ஷங்கர்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 7

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவர், இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முயல்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

  1. லியம் ப்ளங்கட்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 8

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இவர், இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

  1. ராகுல் திவாடியா

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 9

இளம் வீரரான இவர் டெல்லி அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இனிவரும் போட்டிகளிலும் இதனை தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

9.அமித் மிஸ்ரா

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 10

அனுபவ வீரரான இவர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில், அது எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

10.டிரண்ட் பவுல்ட்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 11

அனுபவ மிக்க வேகப்பந்து வீச்சாளரான இவர் பந்துவீச்சில் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். பெங்களூர் போட்டியில் தனது சிறப்பான பீல்டிங் மூலம் அபாரமான கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

11.அவேஷ் கான்

டெல்லி - இராஜஸ்தான் அணிகள் மோதல்!!! டெல்லி டேர்டெவில்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 12

பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர், இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *