இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 1
எப்பொழுது : இராஜஸ்தான் இராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ், மே 13 இரவு 8 மணியளவில்
எங்கே : வான்கடே மைதானம், மும்பை
வானிலை என்ன : வெப்பமிகுந்ததாக இருக்கும், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. இரவில் மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் : இராஜஸ்தான் இராயல்ஸ் 7  மும்பை இந்தியன்ஸ் 10
மைதானத்தில் : இராஜஸ்தான் இராயல்ஸ் 1  மும்பை இந்தியன்ஸ் 4

இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 2

இராஜஸ்தான் இராயல்ஸ் : ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஷீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட் காட், பென் லாஃப்லின், டி ஆர்சி ஷோர்ட், ஜோஃப்ரா, ஜான் பட்லர், ராகுல் டிராவிட், அஜிங்கியா ராகேன் (சி), ஹென்ரிக் க்ளாசென், ஆர்ச்சர், தவால் குல்கர்னி, அங்கிட் சர்மா, அனூரித் சிங், இஷ்சோதி, பிரசாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், மஹிபல் லோம்ரோர், ஆரியமன் பிர்லா, ஜடின் சக்ஸேனா, துஷ்மந்தா சமேரா.

இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 3

மும்பை இந்தியன்ஸ் : சூர்யகுமார் யாதவ், எவின் லீவிஸ், இஷான் கிஷான் (வி), கியொர்ன் போலார்ட், ரோஹித் ஷர்மா(கே), கிருஷ்ண பாண்டியா, ஹார்டிக் பாண்டியா, மிட்செல் மெக்லெனகான், மாயன்க் மார்க்கண்டே, ஜாஸ் ப்ரிட் பம்ரா, முஸ்தாபிஜூர் ரஹ்மான், ராகுல் சாஹார், சவுராத் திவாரி , பேன் கட்டிங், பிரதீப் சாங்வான், ஜீன்-பால் டுமினி, தாஜீந்தர் சிங், ஷரத் லும்பா, சித்தீஷ் லேட், ஆதித்யா தாரே, அகிலா டான்ஜாயா, அனுகுல் ராய், மொஹ்சீன் கான், எம்.டி. நிதேஷ், ஆடம் மில்னே.

இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 4

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 13) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இராஜஸ்தான் இராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இராஜஸ்தான் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணி இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். இந்நிலையில் சென்னை உடனான கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றது அந்த அணி. எனவே இன்றைய போட்டியிலும் இராஜஸ்தான் அணி வெற்றிக்கு போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 5

மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 5இல் மட்டுமே வென்றுள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் இராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. பிறகு நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியடைந்தது. இந்த தோல்விகளால் மும்பை அணி இனிவரும் போட்டிகளில் வென்றால் தான் இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அணி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வென்றது. எனவே இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணி வெற்றிக்காக போராடும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் இராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 6

இராஜஸ்தான்-மும்பை இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளின் சமீபத்திய செயல்பாடுகள் சிறப்பானதாகவே இருந்து வருகின்றன. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், இந்த போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இரு அணிகளின் சமீபத்திய செயல்பாடுகளை கொண்டு பார்க்கும்போது மும்பை அணியின் ஆதிக்கம் இந்த போட்டியில் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *