பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 1

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 14) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி இதுவரை தான் விளையாடிய 11 போட்டிகளில் 5இல் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் பஞ்சாப் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும் வென்று, தன் வெற்றியின் எண்ணிக்கையை பஞ்சாப் அணி உயர்த்த முயலும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பஞ்சாபின் உத்தேச அணி

1.கிறிஸ் கெய்ல்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 2

டி.20 கிரிக்கெட்டிற்கு பெயர் போன அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை பெங்களூர் அணி இந்த முறை ஏலத்தில் எடுக்கத் தவறியது. அவரை மிக எளிதாக தனது அணியில் சேர்த்துக் கொண்ட பஞ்சாப் அணி அவரை வைத்து 3 அபார வெற்றியையும் பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத கிறிஸ் கெய்ல் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி, நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும் இடம் பிடித்து, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2.கே.எல் ராகுல்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 3

இந்த தொடருக்கான பஞ்சாப் அணிக்காக 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட கே.எல் ராகுல், பஞ்சாப் அணி  தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணாக்காமல் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் இவர் தனது அதிரடி ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் பெங்களூர் அணிக்கு நெருக்கடி ஏற்படும்.

  1. டேவிட் மில்லர்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 4

இவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

4.கருண் நாயர்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 5

பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மிகப்பெரும் பலமாக கருண் நாயர் திகழ்ந்து வருகிறார். ஒவ்வொரு போட்டியின் போதும் இவர் அணியின் தேவையை பொறுத்து, தனது ஆட்டத்தை சிறப்பாகவே வெளிப்படுத்தி வருகிறார்.

5.ஆரோன் பின்ச்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 6

கடந்த போட்டியில் விளையாடி வரும் இவர், இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

6.மனோஜ் திவாரி

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 7

கடந்த சில போட்டிகளாக விளையாடி வரும் இவர், இன்றைய போட்டியிலும் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

7.இரவிச்சந்திரன் அஸ்வின்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 8

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான இரவிச்சந்திரன் அஸ்வினை கடும் போட்டிக்கு பிறகு தனது அணியில் எடுத்துள்ள பஞ்சாப் அணி, அவரையே அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. புதிதாக கேப்டன் அவதாரம் எடுத்துள்ள அஸ்வினுக்கு மற்ற தொடர்களை விட இந்த தொடரில் கூடுதல் பொறுப்பு உள்ளது. ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், இவர் பந்துவீச்சில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

8.ஆண்ட்ரியூ டை

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 9

பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வரும் ஆண்ட்ரியூ டை இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

9.அக்சார் படேல்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 10

அனுபவ வீரரான இவர், சில போட்டிகளில் விளையாடவில்லை. இவர் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

10.அங்கிட் இராஜ்புட்

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 11

டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இவர், இன்றைய போட்டியிலும் அதனை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்

11.மோஹித் ஷர்மா

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!! 12

அனுபவ வீரரான இவர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக அமையும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *