இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 1

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 15) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இராஜஸ்தான் இராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி இதுவரை தான் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி இனிவரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தன் வெற்றியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் உத்தேச அணி

1.சுனில் நரைன்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 2பேட்டிங் மற்றும் பவுலிங் என தொடர்ந்து மாஸ் காட்டி வரும் விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான சுனில் நரைன் கொல்கத்தா அணியின் மிகப்பெரும் பலம் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும்.

2.கிறிஸ் லின்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 3

கொல்கத்தா அணியின் மற்றொரு துவக்க வீரரான கிறிஸ் லின்னும் தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார். இருந்த போதிலும் கடந்த தொடர்களை போன்று இன்னும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை, ஒருவேளை இன்றைய போட்டியில் கிறிஸ் லின் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்பும் பட்சத்தில் எதிரணிக்கு கடும் சவால் ஏற்படும்.

3.ராபின் உத்தப்பா

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 4

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா, இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இன்றைய போட்டியிலாவது ராபின் உத்தப்பா தனது பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். கடந்த சில போட்டிகளாக இவர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4.தினேஷ் கார்த்திக்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 5

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பராகவும்,  கேப்டனாகவும் தனது பங்களிப்பை சரியாக செய்து, கொல்கத்தா அணியை சரியான வழியில் அழைத்து செல்லும் தினேஷ் கார்த்திக், தனது பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இருப்பினும் சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிரடியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. நிதிஷ் ராணா

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 6

ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிகளின் பந்துவீச்சை சிதறடிப்பதையே தனது வாடிக்கையாக வைத்திருக்கும் நிதிஷ் ராணா, இந்திய அணியிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

6.ஆண்ட்ரியூ ரசல்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 7

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியிலும் ருத்ர தாண்டவம் ஆடி வரும் ஆண்ட்ரியூ ரசல் இருப்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரும் பலமே.

7.சுப்மன் கில்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 8

19 வயதுகுட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் புரிந்ததன் மூலம் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் இந்த தொடரில் தனக்கான ஒரு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இருப்பினும் கடந்த சில போட்டிகளாக இவர் தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

  1. பிரசித் கிருஷ்ணா

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 9

கடந்த சில போட்டிகளாக சிவம் மவிக்கு பதில் களமிறங்கிய இவர், இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

9.குல்தீப் யாதவ்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 10

சின்னமன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் கொல்கத்தா அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.

10.பியூஸ் சாவ்லா

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 11

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரருமான இவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை கொல்கத்தா அணிக்கு சரியாகவே செய்து வருகிறார்.

11.ஜவோன் சியர்லஸ்

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 12

வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர், கடந்த போட்டியில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். இவர் இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *