இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 1
எப்பொழுது : இராஜஸ்தான் இராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மே 15 இரவு 8 மணியளவில்
எங்கே : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
வானிலை என்ன : மதிய வேளையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது வானம் தெளிவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
நேருக்கு நேர் : இராஜஸ்தான் இராயல்ஸ் 7 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7
மைதானத்தில் : இராஜஸ்தான் இராயல்ஸ் 1 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 2

இராஜஸ்தான் இராயல்ஸ் : ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஷீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட் காட், பென் லாஃப்லின், டி ஆர்சி ஷோர்ட், ஜோஃப்ரா, ஜான் பட்லர், ராகுல் டிராவிட், அஜிங்கியா ராகேன் (சி), ஹென்ரிக் க்ளாசென், ஆர்ச்சர், தவால் குல்கர்னி, அங்கிட் சர்மா, அனூரித் சிங், இஷ்சோதி, பிரசாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், மஹிபல் லோம்ரோர், ஆரியமன் பிர்லா, ஜடின் சக்ஸேனா, துஷ்மந்தா சமேரா.

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 3

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக்(கே/வி), விக் கேட்ச், ஆண்ட்ரே ரஸல், ஷுப்மான் கில், டாம் குர்ரான், பியுஷ் சாவ்லா, ஷிம்மா மாவி, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்சன், இஷாக் ஜாக்ஜி , பிரசீத் கிருஷ்ணா, வினய் குமார், அபூர் வன்காதே, ரிங்கு சிங், கேமரூன் டெல்போர்ட், ஜாவோன் சீரிஸ்.

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 4

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 15) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இராஜஸ்தான் இராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணி இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். இந்நிலையில் சென்னை, மும்பை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது அந்த அணி. எனவே இன்றைய போட்டியிலும் இராஜஸ்தான் அணி வெற்றிக்கு போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 5

கொல்கத்தா அணி இதுவரை தான் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி இனிவரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தன் வெற்றியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!! 6

இராஜஸ்தான் – கொல்கத்தா இரு அணிகளும் சம புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறும் அணியே ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா – சாவா என்கிற போட்டியாக அமைந்துள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இரு அணிகளின் சமீபத்திய செயல்பாடுகளைக் கொண்டு பார்க்கும்போது, இரு அணிகளில் எந்த அணியின் ஆதிக்கம் இந்த போட்டியில் அதிகம் இருக்கும் என்பதை கணிப்பது கடினமாகவே உள்ளது. இருப்பினும் கொல்கத்தா அணி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *