இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 1

ஐ.பி.எல். தொடரில் இன்று (மே 15) இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இராஜஸ்தான் இராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாமல் திணறி வருகிறது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த அணி இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும். இந்நிலையில் சென்னை, மும்பை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது அந்த அணி. எனவே இன்றைய போட்டியிலும் இராஜஸ்தான் அணி வெற்றிக்கு போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இராஜஸ்தான் அணியின் உத்தேச அணி

1.அஜிங்கியே ரஹானே

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 2

கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்ற வகையில் ரஹானே ஒவ்வொரு போட்டியிலும் இராஜஸ்தான் அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார். இவரே இந்த போட்டியிலும் ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் கொடுப்பார். ரஹானே நிலைத்து நின்று ஆடினால், அது இராஜஸ்தான் அணிக்கு பக்கபலமாக இருக்கும்.

2.டி ஆர்ச்சி ஷார்ட்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 3

கடந்த போட்டியில் களமிறங்கிய இவர், இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

3.சஞ்சு சாம்சன்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 4

பேட்டிங்கில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் இந்த போட்டியிலும் தொடரும் என எதிபார்க்கலாம்.

  1. ஜோஸ் பட்லர்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 5

ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் நட்சத்திர வீரரான ஜோஸ் பட்லர் கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இவர் தனது அதிரடி ஆட்டத்தை தொடரும்பட்சத்தில் எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

  1. ஸ்டுவார்ட் பின்னி

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 6

அனுபவ வீரரான இவர் கடந்த சில போட்டிகளாக விளையாடி வருகிறார். இன்றைய போட்டியிலும் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

6.பென் ஸ்டோக்ஸ்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 7

கடந்த தொடரில் புனே அணிக்காக அபாரமாக விளையாடி அந்த அணி இறுதி போட்டி வரை செல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ், இந்த தொடரில் இதுவரை பெரிதான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் கடந்த சில போட்டிகளில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

  1. ஜோஃப்ரா ஆர்ச்சர்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 8

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட, ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆல் ரவுண்டரான இவர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது சிறப்பான ஆட்டத்தை தொடரும்பட்சத்தில், எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும்.

8.தவால் குல்கர்னி

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 9

அனுபவ வீரரான இவர், இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இனிவரும் போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்பட்டால் இராஜஸ்தான் அணிக்கு அது பக்கபலமாக இருக்கும்.

  1. கிருஷ்ணப்பா கௌதம்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 10

சுழற்பந்து வீச்சாளரான இவர்,  இன்றைய போட்டியிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  1. ஸ்ரேயாஸ் கோபால்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 11

இவரின் சிறப்பான சுழற்பந்து வீச்சு இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

  1. ஜெய்தேவ் உனாத்கட்

இராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதல்!!! இராஜஸ்தான் இராயல்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 12

இராஜஸ்தான் அணியால் 11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், இதுவரை சரியாக விளையாடவில்லை. இனி வரும் போட்டிகளில் இவரின் சிறப்பான ஆட்டத்தை எதிர்ப்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *