முதல் தோல்வியால் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு பின்தங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான தோல்வி மூலம் ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடரின் புள்ளி பட்டியலில் சென்னை அணி மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 57 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 197 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு சேன் வாட்சன் (11), முரளி விஜய் (12) என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன் பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் பில்லிங்ஸும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு கூட்டணி சேர்ந்த தோனி – அம்பத்தி ராயூடு கூட்டணி நிதானமாக விளையாடி பொறுமையாக ரன் சேர்த்தது. அம்பத்தி ராயூடு 49 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார், அடுத்த வந்த ஜடேஜாவும் 19 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் தொடர்ந்து தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய தோனி கடைசி 20 பந்துகளுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலையிலும் சிக்ஸர்களாக பறக்கவிட்டு கடைசி ஒரு ஓவருக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை வரை சென்னை அணியை அழைத்து வந்தார்.

 

போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் இந்த கடைசி ஓவரில் தோனி 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐ.பி.எல் தொடரில் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த பட்டியலில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியே முதலிடத்தில் நீடித்து வருகின்றது. முறையே இரண்டாம் இடத்தில் பஞ்சாப் அணியும், மூன்றாம் இடத்தில் சென்னை மற்றும் நான்காம் இடத்தில் ராஜஸ்தான் ராயஸ் அணியும் உள்ளன.

 

புதிய புள்ளி பட்டியல்

1 ஹைதராபாத் 3 3 0 6
2 பஞ்சாப் 3 2 1 4
3 சென்னை 3 2 1 4
4 ராஜஸ்தான் 3 2 1 4
5 கொல்கத்தா 3 1 2 2
6 பெங்களூர் 3 1 2 2
7 டெல்லி 3 1 2 2
8 மும்பை 3 0 3 0

 

  • SHARE

  விவரம் காண

  ஒழுக்கத்தை மீறியதற்காக சர்வதேச போட்டியில் இருந்து இலங்கை வீரர் திடீர் தடை!!

  சர்வதேச போட்டியில் இருந்து ஒழுக்கத்தை மீறிய காரணத்திற்காக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா இடைக் தடை விதிக்கப்பட்டுள்ளார். நிலுவையில் இருந்த விசாரணையின்...

  இந்திய அணியின் பஸ் டிரைவருக்கு உதவி செய்த ரெய்னா – நெகிழ்ச்சியுடன் கூறிய பஸ் டிரைவர்

  இந்திய கிரிக்கெட் அணியின் பஸ் டிரைவர்  ஜெப் குட்வின் தனக்கு உதவி பற்றி கூறியுள்ளார்   கிரிக்கெட் வீரர்கள் வீரர்கள் அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட்...

  டாப்-5 : குறைந்த ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

  ஜிம்பாப்வே எதிரான ஒருநாள் போட்டியின் போது சதம் அடித்ததன் மூலம் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை...

   இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு !!

   இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி தான் வெல்லும்; கங்குலி கணிப்பு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிக...

  வேகப்பந்து வீச்சில் இந்திய அணி முழு பலத்துடன் உள்ளது; ஜாஹிர் கான் சொல்கிறார் !!

  வேகப்பந்து வீச்சில் இந்திய அணி முழு பலத்துடன் உள்ளது; ஜாஹிர் கான் சொல்கிறார் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராஹ் காயம் காரணமாக விளையாடவிட்டாலும் இங்கிலாந்தை...