எல்லா புகழும் இறைவனுக்கே; ரசீத் கான் நெகிழ்ச்சி !! 1

எல்லா புகழும் இறைவனுக்கே; ரசீத் கான் நெகிழ்ச்சி

தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளது புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக ரசீத் கான் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எல்லா புகழும் இறைவனுக்கே; ரசீத் கான் நெகிழ்ச்சி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.

ஹைதரபாத் அணியில் கேன் வில்லியம்சன்(29), யூசுப் பதான்(29), மணிஷ் பாண்டே(16) மற்றும் முகமது நபி(14) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.4 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

எல்லா புகழும் இறைவனுக்கே; ரசீத் கான் நெகிழ்ச்சி !! 3

இதனையடுத்து வெறும் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே ஹைதராபாத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக திணறினர்.

சூர்யகுமார் யாதவ்(34), ஹர்திக் பாண்டியா(24) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் 10 ரன்களை கூட தாண்டமால் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 18.5 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

எல்லா புகழும் இறைவனுக்கே; ரசீத் கான் நெகிழ்ச்சி !! 4

இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரசீத் கான் பேசியதாவது, “முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தொடர் தோல்விகளில் தவித்து வந்த நாங்கள் தற்போது மீண்டும் வெற்றி பாதையில் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முரளிதரன் உள்ளிட்ட அனைத்து பயிற்சியாளர்களும் எங்களின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கின்றனர், அவர்களிடம் இருந்து நிறைய விசயங்களை கற்று கொண்டு வருகிறோம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் எங்கள் அணி நிர்வாகம் எங்களுக்கு உத்வேகத்தை மட்டுமே கொடுத்து எங்களை அதிகம் அதிகம் ஊக்கப்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.