பொளந்து கட்டிய சின்ன தல சுரேஷ் ரெய்னா; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள் !! 1
பொளந்து கட்டிய சின்ன தல சுரேஷ் ரெய்னா; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள்

ஐ.பி.எல் டி.20 தொடரில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

புனே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பொளந்து கட்டிய சின்ன தல சுரேஷ் ரெய்னா; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு சேன் வாட்சன் 12 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதன் பின் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயூடு – சுரேஷ் ரெய்னா கூட்டணி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டு மளமளவென ரன் குவித்தது. அம்பத்தி ராயூடு 45 ரன்னிலும், பின்னர் வந்த தோனி 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் மறுமுனையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பையின் பந்துவீச்சை சிதறடித்த சுரேஷ் ரெய்னா 47 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 169 ரன்கள் எடுத்துள்ளது.

பொளந்து கட்டிய சின்ன தல சுரேஷ் ரெய்னா; ட்விட்டரில் கொண்டாடும் சென்னை ரசிகர்கள் !! 3

சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் இந்த அதிரடி ஆட்டத்தை சமூக வலைதளமான ட்விட்டரில் சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published.