ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 1

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள்

கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும்தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த இரு அணிகள் தான் வெற்றிகரமான அணிகளாகத் திகழ்கின்றன. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 

இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு மீண்டும் தோனியின் தலைமையில் 2017ம் ஆண்டு களமிறங்கிய சென்னை அணி கோப்பையை வென்று கெத்தாக ரீ எண்ட்ரி கொடுத்தது.

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 2

இந்நிலையில், அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. 

இதனால் அடுத்த தொடருக்கான தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் சமீபத்தில் வெளியிட்டுவிட்டு, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஏலத்திற்கு தயாராகி வருகின்றது.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

5 – மிட்செல் ஜான்சன்;

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் பந்துவீச்சாளரான மிட்செல் ஜான்சன் அடுத்த தொடரில் விலை போக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. கடந்த தொடரிலும் விலை போகாத மிட்செல் ஜான்சன் கடந்த தொடரின் பாதியில் கொல்கத்தா அணியால்  அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டார். கடந்த தொடரில் இவர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு போட்டியில் கூட விளையாடாததால் அவரை அணியில் இருந்து கொல்கத்தா அணி விடுவித்துள்ளது.

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 3

4- மிட்செல் ஸ்டார்க்;

நிகழ்கால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சமீப காலமாக தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அடுத்த தொடரில் இவர் விலை போக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 4

3- முஸ்தபிசுர் ரஹீம்;

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை. அடுத்த தொடரில் முஸ்தபிசுர் ரஹ்மானும் விலை போவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மான் விலை போக வாய்ப்பு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் சில நிபந்தனைகளே காரணம் என்றே தெரிகிறது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளை எந்த அணியும் ஏற்றுக்கொள்ளாது என்பதால் முஸ்தபிசுர் ரஹ்மானை எந்த அணியும் விலைக்கு வாங்க முன் வராது.

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 5

2- கவுதம் காம்பீர்;

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும், கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த சிறப்புக்குரியவருமான கவுதம் காம்பீரின் ஐ.பி.எல் பயணம் கடந்த தொடரிலேயே முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூற வேண்டும். அடுத்த தொடரில் காம்பீர் விலை போவது என்பது மிக மிக அரிதான விசயம்.

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 6

  • யுவராஜ் சிங்;

கிரிக்கெட் உலகின் கிங்காக திகழ்ந்த அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது பலருக்கு வேதனையை கொடுக்கலாம் ஆனால் யுவராஜ் சிங்கின் மோசமான விளையாட்டு அவரை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த தொடரில் யுவராஜ் சிங் விலை போக வாய்ப்பே இல்லை என்றாலும், ஒருவேளை இவரது அடிப்படை விலையை வைத்து ஏதாவது ஒரு அணி இவரை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !! 7

அதே போல் யுவராஜ் சிங் இந்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் பட்சத்தில் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முற்றுப்பெற வாய்ப்புகள் அதிகம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *