2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.

ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் 12-ஆவது சீசன் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. 8 அணிகள் சார்பில் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன.ஐபிஎல் 2019: ஏலத்திற்கு பிறகு கிங்ஸ் லெவன் அணி விவரம்! 1

அணிகளின் நிர்வாகிகள் அளித்த விருப்பத்தின் அடிப்படையில் மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் தயாராக உள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது ஐ.பி.எல் போட்டி நடக்கும் என்பதால், இதுவரை போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.

கிங்ஸ்  XI பஞ்சாப்

1. வருன் சக்கரவர்த்தி-8.40 கோடி
2. சாம் குரான் – 7.20 கோடி
3. முகமது ஷமி  – 4.80 கோடி
4. நிக்கோலஸ் புரான் – ரூ.4.20 கோடி
5. மோயஸ் ஹென்றிக்குஸ் – 1 கோடி
6. சர்ஃப்ராஸ் நவ்ஷத் கான் – 25  லட்சம்
7. ஹார்டஸ் விலோஜென் –  75 லட்சம்
8. அர்ஷீத் சிங் – 20  லட்சம்
9. தர்சன் நான்காவது – 30  லட்சம்
10. பிரப்சிம்மன் சிங் – 4.80 கோடி
11. அக்னிவேஷ் அய்ச்சி – 20 லட்சம்
12. ஹர்பிரெட் ப்ரா – 20 லட்சம்
13. முருகன் அஸ்வின் – 20 லட்சம்

மீதமுள்ள அணி: லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, மாயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், கருன் நாயர், டேவிட் மில்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், மன்டிப் சிங்

சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட களம் இறங்காத ஏன் ஐ.பி.எல் போட்டிகளில் கூட விளையாடாத வருணுக்கு 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து பஞ்சாப் வாங்கியதன் பின்னணியில் அந்த அணியின் கேப்டனும் மற்றொரு தமிழக வீரருமான அஸ்வின் இருக்கிறார். தமிழ்நாடு ப்ரீமியில் லீக்கின் போது வருணின் திறமையை பார்த்து வியந்தே அவரை பஞ்சாப் அணிக்காக வாங்கியே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்துள்ளார் அஸ்வின்.ஐபிஎல் 2019: ஏலத்திற்கு பிறகு கிங்ஸ் லெவன் அணி விவரம்! 2

   இதனால் தான் ஏலத்தொகை எட்டு கோடி ரூபாயை கடந்த பிறகும் வருணை விடாமல் வசப்படுத்தியுள்ளது பஞ்சாப் அணி. இதே போல் சென்னை அணியும் வருணை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியதற்கான காரணம் அவரது டி.என்.பி.எல் பெர்பார்மன்ஸ் தான். முதல் இரண்டு டி.என்.பி.எல் சீசனில் ஒன்றில் கூட வெற்றி பெறாத மதுரை அணி மூன்றாவது சீசனில் கோப்பையை கைப்பற்ற வருண் முக்கிய காரணம்.

   மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்று அழைக்கப்படும் வருண் எட்டு விதமாக பந்து வீசக்கூடியவர். டி.என்.பி.எல்லில் ஒட்டு மொத்தமாக பத்து போட்டிகளில் விளையாடிய வருண் ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்து வெறும் 188 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் இவரது எகானமி வெறும் நான்கு ரன்கள் தான். அதாவது ஒரு ஓவருக்கு நான்கு ரன்களை மட்டுமே இவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

   அதிலும் 20 ஓவர் போட்டிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுபவர் வருண் சக்ரவர்த்தி. இதனை எல்லாம் தெரிந்து தான் வருண் சக்கரவர்த்திக்கு எட்டு கோடியே ரூபாயை கொட்டிக் கொடுத்துள்ளது பஞ்சாப் அணி. சென்னை அணி மோஹித் ஷர்மாவுக்கு 5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் வருணை மிஸ் செய்துள்ளது.



  • SHARE

    விவரம் காண

    ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

    தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

    வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

    உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

    அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

    அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

    கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

    இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

    பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...