கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 1

ஐபிஎல் தொடரின் 35வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் இரு அணிகளும் மோதுகின்றன.

பெங்களூரு அணிக்கு எதிராக ஆடும் கொல்கத்தா அணியின் உத்தேச 11 வீரர்களின் பட்டியல் இதோ..

ஜோ டெண்லி
கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 2
LONDON, ENGLAND – JULY 06: Joe Denly of Kent celebrates his hatrick during the Vitality Blast match between Surrey and Kent Spitfires at The Kia Oval on July 6, 2018 in London, England. (Photo by Charlie Crowhurst/Getty Images)

துவக்க அதிரடி வீரரான இவர் இந்த போட்டியில் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும்.

கிரிஸ் லின்

கொல்கத்தா அணியின் மற்றொரு துவக்க வீரரான கிறிஸ் லின்னும் தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார். இருந்த போதிலும் கடந்த தொடர்களை போன்று இன்னும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை, ஒருவேளை இன்றைய போட்டியில் கிறிஸ் லின் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்பும் பட்சத்தில் எதிரணிக்கு கடும் சவால் ஏற்படும்.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 3

ராபின் உத்தப்பா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா, இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இன்றைய போட்டியிலாவது ராபின் உத்தப்பா தனது பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 4

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பராகவும்,  கேப்டனாகவும் தனது பங்களிப்பை சரியாக செய்து, கொல்கத்தா அணியை சரியான வழியில் அழைத்து செல்லும் தினேஷ் கார்த்திக், தனது பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 5

நிதிஷ் ராணா

ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிகளின் பந்துவீச்சை சிதறடிப்பதையே தனது வாடிக்கையாக வைத்திருக்கும் நிதிஷ் ராணா, இந்திய அணியிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 6

சுப்மன் கில்

19 வயதுகுட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் புரிந்ததன் மூலம் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் இந்த தொடரில் தனக்கான ஒரு சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 7

ஆண்ட்ரியூ ரசல்

இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியிலும் ருத்ர தாண்டவம் ஆடி வரும் ஆண்ட்ரியூ ரசல் இருப்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரும் பலமே.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 8

குல்தீப் யாதவ்

சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் ஒவ்வொரு கொல்கத்தா அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 9

பியூஸ் சாவ்லா

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரருமான இவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை கொல்கத்தா அணிக்கு சரியாகவே செய்து வருகிறார்.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 10

பிரதீஷ் கிருஷ்ணா

இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரதீஷ் கிருஷ்ணா தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 11

ஹாரி குர்னே

இளம் வீரரான ஹாரி குர்னே கொல்கத்தா அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் பட்சத்தில் அது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமே.

கொல்கத்தா vs பெங்களூரு: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்கள்!! 12

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *