பஞ்சாப் vs கொல்கத்தா; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா !! 1

பஞ்சாப் vs கொல்கத்தா; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்துள்ள 7வது போட்டியான இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திர அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் vs கொல்கத்தா; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா !! 2

இந்த போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் க்றிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தாப்பா, தினேஷ் கார்த்திக் போன்ற நட்சத்திர வீரர்களும், குல்தீப் யாதவ், பெர்குசான், பிரசீத் கிருஷ்ணா போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், டேவிட் மில்லர் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அதே போல் இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். சாம் குர்ரான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), க்றிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹர்தஸ் வில்ஜன், ரவிச்சந்திர அஸ்வின் (கேப்டன்), வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, ஆண்ட்ரியூ டை.

 

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

க்றிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர், கேப்டன்), சுப்மன் கில், ஆண்ட்ரியூ ரசல், சுனில் நரைன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், லூகி பெர்குஷான், பிரசீத் கிருஷ்னா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *