முழு ஐபிஎல் தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆடமாட்டார்கள்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா 1

2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வீரர்கள் பங் கேற்கமாட்டார்கள் என்று ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி மிகவும் பிரபல மான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் போட்டியில் பங் கேற்க மாட்டார்கள் என்று சிஏ அறிவித்துள்ளது.

முழு ஐபிஎல் தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆடமாட்டார்கள்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2
SYDNEY, AUSTRALIA – SEPTEMBER 22: Steve Smith warms up prior to the NSW First Grade Club Cricket match between Sutherland and Mosman at Glenn McGrath Oval 

இதுதொடர்பாக சிஏ விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள் ளதாவது: உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே ஐபிஎல் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஐபிஎல் போட்டி யில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் பங் கேற்க முடியாத நிலை ஏற்படும்.

அதே நேரத்தில் நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பை போட்டிதான் முக்கியம் என்று சிஏ கருதுகிறது.

எனவே உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 வீரர்கள், ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை உள்ளது. அவர் கள் ஐபிஎல் போட்டியில் பங் கேற்க இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முழு ஐபிஎல் தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆடமாட்டார்கள்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா 3
Warner will make his first appearance in the Caribbean Premier League (CPL) later this year, after being signed by the St Lucia Stars. 

ஐபிஎல் 2019 சீசனுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து யுவராஜ் சிங், ஆரோன் பிஞ்ச் உள்பட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் அணிகள் 2019 சீசனுக்கு தயாராகி வருகின்றன. வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம், யார் யாரை விடுவிக்கலாம் என்பதில் கவனம் செலுத்து வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கருண் நாயர், கேப்டன் அஸ்வின் உள்பட 9 பேரை தக்க வைத்துள்ளது. 11 வீரர்களை விடுவித்துள்ளது. ஒரு வீரரை மற்ற அணியில் இருந்து வாங்கியுள்ளது.

வெளிநாட்டு வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், அண்ட்ரிவ் டை, கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லரை தக்கவைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஆரோன் பிஞ்ச், 2. அக்சார் பட்டேல், 3. மோகித் சர்மா, 4. யுவராஜ் சிங், 5. பரிந்தர் ஸ்ரன், 6. பென் டிவார்ஷுயிஸ், 7. மனோஜ் திவாரி, 8. அக்தீப் நாத், 9. பர்தீப் சாகு, 10 மயாங்க் டாகர், 11. மன்சூர் டார்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *