பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

14வது ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் இளம் வீரரான ஷாருக் கானை (47) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 106 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் சாம் கர்ரான், டூவைன் பிராவோ மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 3

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டூபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்களும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி 46 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 15.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 4

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் மற்றும் முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள் !! 5

இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான தீபக் சாஹர், மொய்ன் அலி போன்ற வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *