இனி எங்களால் இதை மட்டும் தான் செய்ய முடியும்; இறுதியாக ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளார் தோனி !! 1

இனி வரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் தங்களது பொறுப்பற்ற ஆட்டத்தின் மூலம் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 35* ரன்கள் எடுத்திருந்தார்.

இனி எங்களால் இதை மட்டும் தான் செய்ய முடியும்; இறுதியாக ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளார் தோனி !! 2

இதனையடுத்து வெறும் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் முதல் மூன்று வீரர்களான ஸ்டோக்ஸ் (19), உத்தபா (4), சாம்சன் (0) என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர் – ஸ்டீவ் ஸ்மித் ஜோடி தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.3 ஓவரிலேயே ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், நடப்பு தொடரில் 7வது படுதோல்வியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இனி எங்களால் இதை மட்டும் தான் செய்ய முடியும்; இறுதியாக ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளார் தோனி !! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பலரும் பல காரணங்கள் கூறினாலும், கேதர் ஜாதவ், முரளி விஜய்க்கு கொடுத்த வாய்ப்பை இளம் வீரர்கள் யாருக்கும் தோனி கொடுக்காதது தான் முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து பேசிய தோனி, இனி வரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

இனி எங்களால் இதை மட்டும் தான் செய்ய முடியும்; இறுதியாக ஒரு நல்ல செய்தி சொல்லியுள்ளார் தோனி !! 4

இது குறித்து தோனி பேசுகையில், ““முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சிற்கே கை கொடுத்தது. கடந்த நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு மட்டும் மாறாவே இல்லை. நாங்கள் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை தான், ஆனால் அதில் எந்த தவறும் இருப்பதாக நான் உணரவில்லை, எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களில் நான் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். அவர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட இது ஒரு வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *