இந்த வருசம் நாங்க தான் சாம்பியன் ; அடித்து சொல்லும் பஞ்சாப் வீரர் !! 1

இந்த வருசம் நாங்க தான் சாம்பியன் ; அடித்து சொல்லும் பஞ்சாப் வீரர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரை வெல்ல சரியான நேரம் என பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் மார்ச் மாதம் இறுதியிலிருந்து இங்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் வீரர்கள் எங்கேயும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்குக் கூட மத்திய மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீட்டிலேயே கிரிக்கெட் வீரர்கள் முடங்கிக் கிடந்து அங்கேயே பயிற்சியை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தடைபட்டிருந்த ஐபிஎல் தொடர் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது.

இந்த வருசம் நாங்க தான் சாம்பியன் ; அடித்து சொல்லும் பஞ்சாப் வீரர் !! 2

செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி முடிவடைகிறது. ஊரடங்கு காலத்திற்குப் பிறகு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மெல்லமெல்ல தங்களது பயிற்சிகளை துவங்கியிருக்கின்றன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் ஐ.பி.எல் தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதால், இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இப்பொழுதே பேச துவங்கிவிட்டனர்.

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரருமான கிளன் மேக்ஸ்வெல், பஞ்சாப் அணி கோப்பையை வெல்ல இந்த வருடம் சரியான வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த வருசம் நாங்க தான் சாம்பியன் ; அடித்து சொல்லும் பஞ்சாப் வீரர் !! 3

இது குறித்து மேக்ஸ்வெல் பேசியதாவது;

கே.எல் ராகுல் போன்ற சிறந்த வீரர்களுடன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். துபாய் மைதாங்களில் அவ்வளாக பவுன்ஸ் ஆகாது என்பதால் இலகுவாக ரன் குவிக்க முடியும். நானும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது, பிட்சுகளின் தன்மை எனது ஆட்டத்திற்கு கைகொடுக்கும் என்பது எனக்கு கூடுதல் பலம் தான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கோப்பையை வெல்ல இது சரியான தருணம். இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *