அலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி !! 1

அலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி

இளம் வீரர் சுப்மன் கில்லின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் 36 ரன்களும், மணிஷ் பாண்டே 51 ரன்களும், சஹா 30 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும், ஒருவர் கூட அதிரடியாக விளையாடி ரன் குவிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரராக களமிறங்கும் சுனில் நரைன் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் வந்த நிதிஷ் ராணா 26 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

அலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி !! 3

 

இதன்பிறகு கூட்டணி சேர்ந்த துவக்க வீரர் சுப்மன் கில் – இயான் மோர்கன் கூட்டணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு வெற்றிக்கு தேவையான ரன்னை பொறுமையாக சேர்த்தது.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் வகுத்த அனைத்து வியூகங்களை உடைத்தெறிந்து இறுதி ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடிய இந்த கூட்டணி கொல்கத்தா அணிக்கு அசத்தல் வெற்றியையும் பெற்று கொடுத்துள்ளது.

அலட்டி கொள்ளாமல் சன் ரைசர்ஸிற்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி !! 4

சுப்மன் கில் 62 பந்துகளில் 70 ரன்களும், இயான் மோர்கன் 29 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து கொடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அஹமது, ரசீத் கான் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *